யோவ் உனக்கு காதலி இருக்கா.. அதிமுக தொண்டர் தக்.. டென்ஷனான திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: சட்டமன்ற தேர்தல் தமிழக அரயிலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சில விஷயங்கள் எப்போதும் மாறாது. அரசியல் மாறினாலும் தலைவர்களின் பேச்சுகள் என்னவோ அப்படியே தான் இருக்கும். அதிமுக மூத்த நிர்வாகி திண்டுக்கல் சீனிவாசனும் அப்படித்தான். திண்டுக்கலில் நடந்த கட்சி கூட்டத்தில் டங் ஸ்லிப் ஆகி உளறியது, போன் பேசிய நிர்வாகியிடம் கிண்டல் கலந்த கோபத்தில் கேள்வி எழுப்பியது என சம்பவம் செய்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கலில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய ஒவ்வொரு கருத்தும் குபீர் ரகம். சக்ரவர்த்தி திருமகள் படம் வந்து 60 வருஷம் ஆச்சு. அதில் நயவஞ்சகரின் நாக்கு என்று கருணாநிதியை நம் தலைவர் விமர்சித்தார். இல்லை அன்றைக்கு கருணாநிதி இல்லை. காங்கிரஸை விமர்சித்தார். இது மட்டுமல்ல மேலும் பல இடங்களில் அவருக்கு டங் ஸ்லிப் ஆனது.

உனக்கு காதலி இருக்கா
அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல் என்பதற்கு பதிலாக மரகம் சந்திரசேகர் என்று உளறினார். "அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து அடுத்தகட்சிக்கு சென்றுள்ளனர். ஊரில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தோழர்களே உங்களுக்கு எது கிடைக்கிறதோ அதை வைத்து அடியுங்கள். நன்றி கெட்ட நாய்கள் அவர்கள். தவெக ஆட்சியில் பல கோடி ரூபாய் குதிரை பேரம் நடக்கிறது. அதற்கு ஆசைப்பட்டு தான் போயுள்ளனர். இதைப்பற்றி ஆளுநரிடம் புகார் கூறியுள்ளோம்" என்றார்.
அப்போது தொண்டர் ஒருவரை பார்த்து, "ஏய். யாருய்யா அங்க பேசிட்டு இருக்கவன். யோவ் நீ என்ன காலைல இருந்து ஏதோ பேசிட்டே இருக்க. நீ எந்த ஊரு" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த தொண்டர் வத்தலகுண்டு என்று கூற, "உனக்கு காதலி ஏதாவது இருக்கா. செல்லை புடிச்சு உடைச்சுருவேன். உன் வயசு என்ன. அவனை வெளிய அனுப்புங்க. பெரிய இம்சையா இருக்கு. நீ கொத்தனாரா. சித்தாள்களை எல்லாம் கூப்பிட்டு வந்துருக்கியா.
புத்திமதி சொல்லாதீங்க
சும்மா இரு. என்ன எங்களுக்கு எல்லாம் வேலை இல்லையா. கட்டுப்பாடோட இரு என்று சீனிவாசன் கூறினார். அந்த தொண்டரின் செல்போன் மீண்டும் ஒலித்தால் கோபமாக பேசி அவரை வெளியேற்ற சொன்னார். கடன் ஏதாவது வாங்கி வந்துருக்கார் போல. சித்தாள் வரவு செலவு போல"என்று கூறினார். அந்த தொண்டர் வெளியேறியதும் அவர் அமைதியாகவில்லை.
கூட்டத்தில் இருந்த மற்றொரு தொண்டர் ஒர கருத்து கூறவே, "புத்திமதி எல்லாம் சொல்லாங்க உக்காருப்பா. டென்ஷன் ஆக்காத. நாங்க என்ன வேலை இல்லாமையா வந்துருக்கோம். கருத்துகளில் அதிகாரம் பண்ணாதே. குண்டு விளையாடவா நாங்கள் வந்துள்ளோம். இப்படி எல்லாம் குழப்பம் பண்ணாதே. உன் கூட உன் மனைவி எப்படி வாழுதுன்னு தெரியலை" என்று நக்கலாக கூறினார்.
தெரிஞ்சுக்கோங்க
தொடர்ந்து பேசிய அவர், "என் மகன் தவெக போறான்னா அதைத் தடுக்கலைன்னா நான் ஆம்பளையா. எதுக்கு வேட்டி, சட்டை. வீசி எறியுங்கள். என்னங்கடா நாடகம் இது. தெய்வமே இதை நீ தான் கேட்கணும் என்றார். இறுதியாக நீட் தேர்வில் வெற்றி பெறாத அரசு மாணவர்களுக்கு எடப்பாடியார் 7.5 சதவீதம் ஒதுக்கீடு கொண்டு வந்தார். எல்லாம் தெரிஞ்சுக்கோங்கப்பா" என்று கூறினார். அவரின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.














Click it and Unblock the Notifications