ஈரோடு மாநகராட்சியுடன் புதிதாக இணையும் பகுதிகள்.. உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான வர்த்தக நகரங்களில் ஒன்றான ஈரோடு மஞ்சள் மற்றும் ஜவுளிக்கு பெயர் போனது. ஈராடு மாநகரம் காவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் ஒரு பக்கம் ஈரோடு உள்ளது மறுபக்கம் பள்ளிப்பாளையம் உள்ளது. ஆனால் பள்ளிப்பாளையம் என்பது நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறது. ஈரோடு மாநகரின் ஒரு அங்கம் போல் இருந்தாலும் மாவட்டமே வேறாக பள்ளிப்பாளையம் இருக்கிறது. இந்த சூழலில் ஈரோடு மாநகராட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. லக்காபுரம் ஊராட்சி, 46 புதூர் ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக மாறிவிட்டன. அந்த வகையில் ஈரோடு மாநகராட்சி 2008-ஆம் ஆண்டு வரை நகராட்சியாக இருந்தது. ஈரோட்டைச் சுற்றி இருந்த வீரப்பன்பாளையம், பெரியசேமூர், சூரம்பட்டி, காசிபாளையம் நகராட்சிகள், பி.பி.அக்ரஹாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகள் மற்றும் அருகே இருந்த ஊராட்சிப் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைந்தன. இதனால் 40 வார்டுகள் கொண்ட ஈரோடு நகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு 60 வார்டுகளாக உள்ள மாநகராட்சியாக உயர்ந்தது.

Which areas are to be newly merged with the Erode Corporation Changes following the local elections

வார்டுகளின் பரப்பளவும் உயர்ந்து உள்ளது. தற்போது சுமார் 110 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஈரோடு மாநகராட்சி அமைந்துள்ளது. நாளுக்கு நாள் ஈரோடு மாநகராட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே சுற்றுவட்டாரப் பகுதிகளும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.

அந்த வகையில் வளர்ச்சி அடைந்து வரும் லக்காபுரம் ஊராட்சி, 46 புதூர் ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து லக்காபுரம், 46 புதூர் பகுதிகளை ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று ஈரோடு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பகுதிகள் இன்னும் மாநகராட்சியுடன் இணைக்கப்படவில்லை.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் கூறுகையில், "ஈரோடு மாநகராட்சியுடன் புதிதாகப் பகுதிகளை இணைப்பது தொடர்பான எந்த அரசு ஆணையும் இதுவரை வரவில்லை. அரசு ஆணை வரப்பெற்றால் மட்டுமே புதிய பகுதிகள் இணைப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த உள்ளாட்சி அமைப்பு காலம் நிறைவடைந்தவுடன் புதிய ஊராட்சிகள் சேர்க்கப்படுமா?, தேர்தலுக்குப் பின்னர் சேர்க்கப்படுமா? என்பது அரசின் முடிவாகும். புதிதாகப் பகுதிகள் இணையும்போது ஈரோடு மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ஏற்கனவே இருக்கும் வார்டு பரப்பளவுகளில் மாற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது." என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+