ஓடும் ரயிலில் கணவன் கொலை.. கூலிப்படை ஏவிய அரசு பெண் அதிகாரி! பீகாரில் கள்ளக்காதலால் பகீர் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலம் ககாரியாவில் ஓடும் ரயிலில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.. இது ஏதோ பிரபல தாதா அல்லது பிரபல கொள்ளையன் நடத்திய காரியமல்ல.. இந்த கொடூரத்துக்கு பின்னே ஒரு பெண் சம்பந்தப்பட்டுள்ளார்.. அதுவும் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்.. இந்த பெண்ணும் சாதாரண பெண் அல்ல.. இவர் ஒரு அதிகாரியும்கூட.. இப்போது இந்த பெண்ணுடன் சேர்த்து 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது?

பீகாரில் ஜமுய் பகுதியில் மின்சாரத் துறையில் கிரேடு-1 தொழில்நுட்ப வல்லுநராகப் (Grade-I Technician in Electricity Department) பணியாற்றி தேவ் குமார் குஞ்சன்.. இவரது மனைவி பெயர் ஸ்மிதா குமாரி.. இவர் சுபெளல் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த 11ம் தேதி, ஸ்மிதா குமாரியைச் சந்திப்பதற்காக ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார் தேவ்குமார்.. ரயில் பட்லாகாட் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தேவ் குமார் துப்பாக்கியால் சுடப்பட்டார்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Bihar woman officer arrested for train murder conspiracy

அரசு அதிகாரியை காட்டித்தந்த க்ளூ

ரயில்வே எல்லைக்குள் இந்த கொடூரக் குற்றம் நடந்ததால் மான்சி அரசு ரயில்வே காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.. இந்த வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக பரவுனி ரயில்வே துணைப் பிரிவு காவல் அதிகாரி தலைமையில் சிறப்புப் பணிக்குழு (STF) மற்றும் சிறப்பு விசாரணைக்குழு (SIT) அமைக்கப்பட்டு தீவிர விசாரணையை முடுக்கிவிடப்பட்டது.

அப்போது ஸ்மிதா குமாரி போலீசாரிடம், ரயிலில் ஏதோ ஓரு கும்பல் கொள்ளையடிக்க வந்துள்ளது.. அந்த கொள்ளையின்போதுதான் என்னுடைய கணவரை சுட்டு கொன்றுவிட்டார்கள் என்று கதறி அழுது சொன்னார்..

ஆனால், சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் அறிவியல் பூர்வமான தடயங்கள், ஸ்மிதா மீதே போலீசுக்கு சந்தேகத்தை திருப்பியது.. அவரது செல்போன் அழைபபுகள், அங்குள்ள கேமராவில் பதிவான நடமாட்டங்களை தீவிரமாகக் கண்காணித்தபோதுதான், இதன் பின்னணியில் இருந்த திடுக்கிடும் கொலைச் சதி வெளிச்சத்திற்கு வந்தது...

மொத்த உண்மையையும் சொன்ன ஸ்மிதா குமாரி

தங்கள் பாணியில் விசாரணையை ஆரம்பித்ததுமே, போலீசாரிடம் மொத்த உண்மையையும் ஸ்மிதா குமாரி சொல்லி விட்டார்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி சங்கர் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, கொலை செய்யப்பட்ட தேவ் குமார் குஞ்சன், அவருடைய மனைவி ஸ்மிதா குமாரி மற்றும் கள்ளக்காதலன் அஜீத் குமார் ஆகிய 3 பேருமே கடந்த 2017ம் ஆண்டு மின்சாரத் துறையில் ஒன்றாகப் பணியில் சேர்ந்தார்கள். அப்போதுதான் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் 2018ம் ஆண்டில் ஸ்மிதாவும் தேவ் குமாரும் திருமணம் செய்து கொண்டனர்.. இந்த தம்பதிக்கு இப்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே, ஸ்மிதா குமாரி கடந்த 2023ம் ஆண்டு அரசு மோட்டார் வாகன ஆய்வாளராக (MVI) உயர் பதவி பெற்று சுபெளல் பகுதிக்கு மாற்றப்பட்டார்.

நீடித்த கள்ளக்காதல்

பதவிகள் மாறினாலும் அஜீத் குமாருடன் ஸ்மிதாவுக்கு இருந்த கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது.. இந்த கள்ளக்காதல் கணவருக்கு தெரிந்து, ஸ்மிதாவை கண்டித்துள்ளார்.. இது கள்ளக்காதலர்களுக்கு எரிச்சலை தந்துள்ளது.. தங்கள் உறவுக்கு கணவர் தேவ் குமார் குஞ்சன் பெரும் தடையாக இருப்பதை உணர்ந்த கள்ளக்காதல் ஜோடி, அவரை கொன்றுவிட முடிவு செய்தது.

இதற்காக ராஜு குமார் என்கிற தீரஜ் என்ற தொழில்முறை கூலிப்படை கொலையாளியை 4 லட்சம் ரூபாய் பணத்திற்கு ஒப்பந்தம் பேசியிருக்கிறது இந்த ஜோடி. சம்பவத்தன்று தேவ் குமார் ரயிலில் பயணிக்கும் தகவல் தெரிந்ததுமே, ஓடும் ரயிலிலேயே அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர்.

மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட ஸ்மிதா

கைது செய்யப்பட்ட கூலிப்படை கொலையாளி தீரஜ் மீது ஏற்கனவே 2025ம் ஆண்டு முதல் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்போது பெண் அதிகாரி சுமிதா குமாரி, அவரது கள்ளக்காதலன் அஜித் குமார், கூலிப்படை கொலையாளி தீரஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவர்களது செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.

இவ்வளவு பெரிய கொலையை ஸ்கெட்ச் போட்டு செய்துவிட்டு, கொள்ளை கும்பல் கொன்றுவிட்டது என்று போலீசாரிடம் சொல்லி தப்பிவிடலாம் என்று எளிதாக கணக்கு போட்டார் ஸ்மிதா.. ஆனால் இப்போ???

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+