வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட சோனம் வாங்சுக்! முடித்து வைக்கப்படும் உண்ணாவிரதம்? ராகுல் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளை கண்டித்து சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தார். இந்நிலையில், அவர் போராட்டக்களத்திலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறுப்படுத்தப்பட்டிருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

நீட் வினாத்தாள் லீக் ஆகியிருந்த விவகாரம் நாடு முழுவதும் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இது ஏதோ இன்று, நேற்று புதியதாக நடப்பது கிடையாது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பலமுறை பேப்பர் லீக் ஆகியிருக்கிறது. எனவே இந்த விஷயத்திற்கு உறுதியான முடிவு கட்ட வேண்டும், மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராட்டங்களை தொடங்கினர்.

Rahul Gandhi

இந்த கோரிக்களை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் CJP அமைப்பும் போராட்டத்தை நடத்தியது. தர்மேந்திர பிரதான், ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அந்த அமைப்பு அறிவித்திருந்தது. இந்த போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை தொடங்கினார். 21 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்த அவர், தனது கோரிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை. அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்துக்கொண்டே வருகிறது என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து இன்று அதிகாலை சோனம் வலுக்கட்டாயமாக போராட்டக்களத்திலிருந்து போலீசாரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

இந்த நடவடிக்கைக்கு ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். "மோடி அரசின் கொள்கைகளாக பொய்யும், வன்முறையுமாகத்தான் இருக்கிறது. அகிம்சை வழியில் போராடி வந்த சோனம் வாங்சுக்கை, ஜந்தர் மந்தரிலிருந்து அகற்றியது தவறான செயலாகும். வினாத்தாள் லீக், அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகள் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.

இப்படி இருக்கையில், மத்திய அரசின் எந்தவிதமான அடக்குமுறையும் மாணவர்களையோ, அவர்கள் மீது அன்பு வைத்திருக்கும் எங்களையோ தடுத்து நிறுத்திவிடாது" என்று கூறியிருக்கிறார்.

சோனம் வாங்சுங் அப்புறப்படுத்தப்பட்டதையடுத்து மற்ற போராட்டக்காரர்களையும் ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக டெல்லி போலீஸ் வெளியேற்றி வருகிறது. இதையடுத்து கரப்பான் பூச்சி கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+