For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

-நாட்டுக்-கு ஒற்று-மைக்கு கூட்டாட்-சியே நல்லது எ-ன்கிறார் நாயுடு

கோவை:

மத்தியில் நல்லாட்சி நடக்கவும், மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படவும், கூட்டணி ஆட்சிமிகவும் அவசியம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

ஈரோட்டில் ம.தி.மு.க நடத்தும் தமிழக எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுபேசியதாவது:

நமது நாட்டிற்கு கூட்டணி ஆட்சித் தத்துவம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இங்கு மறுமலர்ச்சித்திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியாக இருந்த அண்ணா விளக்கினார். இதே போன்று எனதுமாமனாரும் தெலுங்கு தேசக் கட்சியின் நிறுவனருமான என். டி ராமராவும் கூறியிருந்தார். பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கத்தையும், சமூக நீதியையும் அடிப்படையாகக் கொண்டு வளர்ந்துள்ள ம.தி.மு.கவிற்கும் நிறையஒற்றுமைகள் உண்டு. இரண்டு கட்சிகளும் ஒரே நோக்கத்தில் செயல்படும் கட்சிகளாக உள்ளன.

அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, கொள்கையில் உறுதி ஆகிய வைகோவின் நிலையைபாராட்டுகிறேன்.

இந்தியாவில் பல்வேறு மொழி, இனக் கலச்சாரங்கள் இருந்தாலும் ஒற்றுமையாக நாடு இருப்பதைப் போல, தேசியஜனநாயக முன்னணியில் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும், ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்.கூட்டணி ஆட்சி தத்துவம் நிலைக்க வேண்டும்.

தனிக் கட்சி, குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது கல்வி அறிவு மேம்பாடு, வறுமை ஒழிப்புத் திட்டங்கள்சரியாக செயல்படுத்தப்படவில்லை. இன்றைய பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்த மத்திய நிதியமைச்சர்யஷ்வந்த் சின்கா கடுமையாக உழைத்து வருகிறார். இதன் பலன் விரைவில் தெரிய வரும்.

தேசியஅளவில் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைவது மிகவும் அவசியம். அதுதான் நாட்டின்எதிர்காலத்திற்கும் பயனள்ளதாக இருக்கும். அவ்வாறு உருவான தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைவருடையஉணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்படுகிறது. மாநில அளவிலான கட்சிகள் தங்கள் பகுதிக்கு என்ன தேவைஎன்பதை அறிந்து கொண்டு, அதனை மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்றுத் தர முடியும்.

ஆந்திர மாநிலத்தில் சர்ச் தாக்குதலுக்குள்ளானது. சர்ச்சில் குண்டு வெடித்தது. இவர்கள் மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்ள அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சமுதாய அமைதியைச் சீர்குலைக்கும் எந்த ஒருநிகழ்ச்சியையும் தடுக்கவும், தண்டிக்கவும் ஆந்திர அரசு முயன்று வருகிறது. நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X