தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அரசியல் சட்டத்தை மாற்றியமைக்க மதிமுக மாநாட்டில் தீர்மானம்

ஈரோடு:

அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் என்பது உள்பட 17 தீர்மானங்கள் ஈரோட்டில் நடந்-த மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க.) சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஈரோட்டில் தமிழர் எழுச்சி மாநாடுநடைபெற்-ற-து. இரண்டு நாள் மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

1. இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அந் நாட்டுக்கு உதவுவதில்லை என்று இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு இம் மாநாடுநன்றி தெரிவித்துக் கொள்கிறது.

2. சேது சமுத்திர திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கி அத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்.

3. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

4. முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்தவேண்டும். தமிழக-கேரள மாநில மக்களிடையே நல்லுறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

5. தமிழை செம்மொழியாகவும், இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் மத்திய அரசு அறிவிக்கவேண்டும். கலப்புத் திருமணம் செய்வோருக்கு அரசுவேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.

6. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இலங்கைஅரசிடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

7. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 80 முறைக்கு மேல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இந்தியஅரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும்.

8. சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள்படி மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவேண்டும். மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களக்கும் சமமானஅளவில் இடம் ஒதுக்கவேண்டும். நதிகள் அனைத்தையும் தேசியமயமாக்கி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

9. சமூக நீதி ஒதுக்கீட்டை சட்டமன்றங்களே முடிவு செய்ய அதிகாரம் வழங்கவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவை நீக்கவேண்டும்.மாநில அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிட அனுமதிக்கக்கூடாது..

10. தேர்தலில் குற்றவாளிகள் போட்டியிடுவதைத் தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும். வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்கவேண்டும்.ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவி வகிக்க சட்டம் இயற்றவேண்டும்.

மற்-றும், தாய் மொழிக் கல்வி கற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும், தனி இட ஒதுக்கீடும் வழங்கவேண்டும்.கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+