தமிழகத்தில் இன்று
நிலக்கரி வழக்கு: ஜெ. உள்பட 10 பேர் மீ-து குற்றச்சாட்டு பதிவு
சென்னை:
நிலக்கரி இறக்குமதி தொடர்பான ஊழல் வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட 10 பேர் மீது திங்கள்கிழமை குற்றச்சாட்டுகள்பதிவு செய்யப்பட்டன.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம்மின்வாரியத்துக்கு ரூ.6.5 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்பட 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு 2-வது சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி இவ் வழக்கிலிருந்து ஜெயலலிதாவை நீதிபதிவி.ராதாகிருஷ்ணன் விடுவித்தார். சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. இதையடுத்து ஜெயலலிதாவை மீண்டும் இவ் வழக்கில் குற்றவாளியாக மீண்டும்சேர்த்து விசாரிக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து இவ் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவ் வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகும்படி நீதிபதிராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்கள்.
10 பேர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அனைவரும் தாங்கள் குற்றவாளிகள்இல்லை என்று நீதிபதியிடம் கூறினர். பின்னர் இவ் வழக்கை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் சாட்சிகளிடம் விசாரணைநடத்தப்படும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications