தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

உடுமலையில் தந்தமில்லாத அரிய ஆண் யானை சாவு

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனப் பகுதியில் தந்தமில்லாத அரிய வகை ஆண் யானை இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தந்தமில்லாத ஆண் யானைகள் அரியவையாகக் கருதப்படுகின்றன. உடுமலைப்பேட்டை வனப்பகுதியில் இத்தகைய யானைகள் சில வசித்து வருகின்றன.

இந் நிலையில், வனப்பகுதிக்கு அருகில் உள்ள குலியபட்டி அருகே தந்தமில்லாத ஆண் யானை ஒன்று இறந்து கிடந்ததாக இந்திரா காந்து வனவிலங்குச்சரணாலய வார்டன் உதயனுக்கு சனிக்கிழமை தகவல் வந்தது.

உடனே, சம்பவ இடத்துக்கு மருத்துவர்களுடன் வனத்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு இறந்து கிடந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண்யானையை மருத்துவர்கள் போஸ்ட்மார்டம் செய்தனர்.

போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்தபிறகுதான் யானை எவ்வாறு இறந்தது என்று தெரியவரும் என்று உதயன் தெரிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+