தமிழகத்தில் இன்று
2002-க்குள் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி - அமைச்சர் பாஸ்வான்
டெல்லி:
2002-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் தொலைபேசி வசதி செய்து தரப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
2002-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தொலைபேசி வசதி செய்து தரப்படும். புதிய தொழில்நுட்பத்தின் மூலம்தொலைபேசி இணைப்பு வழங்கப்படும்.
சர்வதேச தொலைபேசிக் கட்டணம் (ஐ.எஸ்.டி.) விரைவில் குறைக்கப்படும். தொலைத் தொடர்புத் துறையில் தனியார்கள் ஈடுபடுத்தப்பட்ட பிறகு கட்டணமுறையில் மாற்றம் இருக்கும். நுகர்வோர்கள் பயனடையும் வகையில் புதிய கட்டண விகிதம் இருக்கும்.
இன்டர்நெட் தொலைபேசி இணைப்பு, வாய்ஸ் டேட்டா போன்றவற்றுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பான நடைமுறைப் பணிகளை மத்திய அரசு தற்போதுநிறுத்தி வைத்துள்ளது.
தொலைத் தொடர்புத் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை அக்டோபர் முதல் தேதி தொடங்கும் என்றார் பாஸ்வான்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications