நவரத்திலோவா - மகேஷ் பூபதி ஜோடி தோல்வி
விம்பிள்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டை ஆட்டத்தில் அமெரிக்காவின் மார்ட்டினா நவரத்திலோவா, இந்தியாவின் மகேஷ் பூபதி ஜோடி முதல்சுற்றிலேயே தோல்வியடைந்தது.
சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேச டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற நவரத்திலோவா இந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அவர் மீண்டும்விளையாடினார். கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் முதல் சுற்றில் ஜேன் சிமரினிக், மரியாம் ஓரிமான்ஸ் ஜோடியை எதிர்த்து விளையாடினர். ஆனால், 4-6, 7-6 (7-5), 7-6) (18-16)என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர்.
பெண்கள் இரட்டையர் ஆட்டத்திலும் நவரத்திலோவா விளையாடி வருகிறார். ஆடவர் இரட்டையர் பிரிவில் ஜெர்மனியின் டேவிட் பிரினோசிலுடன் ஜோடிசேர்ந்துள்ள மகேஷ், 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றிலேயே பூபதி தோற்றுவிட்டார். 9 முறை விம்பிள்டனில் மகளிர் பிரிவில் பட்டம் வென்றுள்ள நவரத்திலோவா இந்தமுறைய ஒற்றையர் ஆட்டத்தில் விளையாடவில்லை.













Click it and Unblock the Notifications