தமிழகத்தில் இன்று
வாஜ்பாயின் யோசனையைக் கேட்கிறார் சந்திரிகா
கொழும்பு:
இலங்கையில் சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்புச்சீர்திருத்தம் பற்றி இந்தியாவின் கருத்தைக் கேட்க இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, தனக்கு மிகவும் நம்பிக்கையாக உள்ள கேபினெட் அமைச்சர் லட்சுமண்ஜெயகோடியை அவர் இந்தியாவுக்கு அனுப்பியுள்ளார்.
அதிபரின் செயலர் பாலபட்டாபெண்டியுடன் செவ்வாய்க்கிழமை காலை இந்தியாவுக்குலட்சுமண் ஜெயகோடி சென்றுள்ளார். அவர், இந்தியப் பிரதமர் வாஜ்பாய் உள்படஅமைச்சர்கள் சிலரைச் சந்தித்துப் பேசுகிறார். இந்தியாவுக்கான புதிய இலங்கைத்தூதராக நியமிக்கப்படவுள்ள சேனக டயஸ் பண்டாரநாயகாவும் அமைச்சருடன்இந்தியா சென்றுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதியஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் பற்றி அவர்களது கருத்துக்களை லட்சுமண்ஜெயகோடி கேட்டறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை முறையில் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் இலங்கையில்நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. புதிய அரசியலமைப்புச் சட்டம் இம் மாதம்இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக இலங்கைஅரசுக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே வெள்ளிக்கிழமை பேச்சு நடைபெற உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் இப் புதிய சீர்திருத்தத்தை நிராகரித்துவிட்டதாக விடுதலைப் புலிகள்அறிவித்துள்ளனர். இலங்கை அரசின் இந் நடவடிக்கை எதிர்பார்த்ததுதான் என்றும்ஆச்சரியப்படவில்லை என்றும் தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications