தமிழகத்தில் இன்று
பிஜி ஆட்சியில் இந்தியர்களுக்கு இடம் கிடையாது - புதிய பிரதமர்
சுவா:
பிஜி ஆட்சிப் பொறுப்பில் இந்தியர்களுக்கு இடம் கிடையாது என்று புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லைசீனியா கராசே திட்டவட்டமாககூறியுள்ளார்.
ராணுவ ஆட்சியாளர்களால் புதிதாக நியமிக்கப்பட்ட புதிய பிரதமர் லைசீனியா கராசே செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
தலைநகர் சுவாவுக்கு வெளியே உள்ள ராணுவ முகாமில் வைத்து அவர் பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றுக் கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில், இந்திய வம்சாவளியினருக்கு ஆட்சியில் பங்களிக்க வகை செய்யும் 1997-ம் ஆண்டு அரசியல் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படாது.
ஆட்சியில் இந்தியர்களுக்கு இடம் தர முடியாது. பிற சமூகத்தவர்களின் நலனுக்காக பிஜி இனத்தவர்கள் புறக்கணிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கமுடியாது. என்றார்.
19 பேர் கொண்ட அமைச்சரவைக்கு கராசே தலைமை வகிக்கிறார். ராணுவ ஆட்சியாளர்கள், இவரை, திங்கள்கிழமை பிரதமராக அறிவித்தனர்.
பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, ராணுவத் தளபதி பிராங்க் பைனிமராமா தலைமை வகித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சண்டை:
புதிய பிரதமர் பதவியேற்ற சில மணி நேரங்களில் பிஜி நாடாளுமன்ற வளாகத்தில் கூடியிருந்த புரட்சியாளர் ஜார்ஜ் ஸ்பீடின் ஆதரவாளர்களுக்கும், ராணுவவீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
சண்டையில் நான்கு புரட்சியாளர்கள் காயமடைந்தனர் என்று பிஜி ரேடியோ தெரிவித்துள்ளது. ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஹோவர்ட் பொலிடினிசெய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஸ்பீட் ஆதரவாளர்கள் திடீரென செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்து முதலில் துப்பாக்கியால் சிலர் சுட்டனர். இதையடுத்து புரட்சிக்காரர்களின் ஆதரவாளர்கள் திருப்பிச் சுட்டனர். இதில்நான்கு புரட்சிக்காரர்கள் காயமடைந்தனர்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே இருந்த ராணுவத்தினர் திருப்பிச் சுடவில்லை. வளாகத்திற்குள் சில ராணுவ வீரர்கள் நடமாடியதைப் பார்த்த ஸ்பீட்ஆதரவாளர்கள் அவர்கள் மீது துப்பாக்கியால் சுடத் துவங்கினர். இதையடுத்து துப்பாக்கிச் சண்டை மூண்டது என்றார்.
மே 19-ம் தேதி முதல் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட பலரை ஜார்ஜ் ஸ்பீடின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் சிறைவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications