தமிழகத்தில் இன்று
மரபுசாரா எரிசக்தி திட்டம்: தமிழகத்துக்குப் பிரதமர் பாராட்டு
கயத்தார்:
தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த மரபுசாரா எரிசக்தித் திட்டத்துக்குப்பிரதமர் வாஜ்பாய் பாராட்டுத் தெரிவித்தார். மற்ற மாநிலங்களும் தமிழகத்தைப்பின்பற்றவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கயத்தாரில் 15 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தையும் அங்குகட்டப்பட்டுள்ள காற்றாலை தொழில்நுட்பத்துக்கான பயிற்சி மையத்தையும் அவர்புதன்கிழமை துவக்கி வைத்துப் பேசியதாவது:
தமிழகத்தில் மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்த பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.இது பாராட்டப்படக்கூடியது. தமிழகத்தின் இந்த ஒருங்கிணைந்த மரபுசாரா எரிசக்தித்திட்டங்களை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு மற்ற மாநிலங்களும்செயல்படவேண்டும்.
இயற்கையாக உள்ள எரிசக்தி வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனைத்துமாநிலங்களும் முன் வரவேண்டம். அதற்கான திட்டங்களைத் தீட்டிசெயல்படுத்தவேண்டும். பொதுத் துறையிலோ அல்லது தனியார் துறையிலோமேற்கொள்ளப்படும் மின் திட்டங்களில் இவற்றை அமல்படுத்தவேண்டும்.
மரபுசாரா எரிசகத்தி தொடர்பான முழுமையான கொள்கைத் திட்டத்தை மத்திய அரசுவிரைவில் அறிவிக்கும். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.புதிய நூற்றாண்டில் அனைத்துத் துறையிலும் இயற்கையாக உள்ள வளங்களைப்பயன்படுத்தவேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி நாட்டின் மின் உற்பத்தியைஅதிகரிக்கத் தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மத்தியஅரசின் முயற்சிகளுக்கு பெரிய நிறுவனங்களும், தனியார்களும் முன் வந்து நிறையமுதலீடு செய்யவேண்டும் என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications