தமிழகத்தில் இன்று
கோவை அரசு பொருட்காட்சியில் ரூ. 28.5 லட்சம் வருவாய்
கோவை:
கோவையில் நடந்த அரசு பொருட்காட்சியில் ரூ. 28. 5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
கோவையில் கடந்த இரண்டு மாதங்களாக அரசு நடத்தும் பொருட்காட்சி நடந்தது. இதன் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் மாநில செய்தித்துறை அமைச்சர் முல்லைவேந்தன் பேசியதாவது:
அரசு சார்பில் பொருட்காட்சி நடத்துவதில் தற்போது வருவாய் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் இது ரூ. 8 கோடியைத் தாண்டும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பொருட்காட்சியை சேலம் மற்றும் திருநெல்வேலியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கோவையில் நடந்த பொருட்காட்சியில் ரூ.28.5 லட்ச ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது என்று அவர் பேசினார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேசுகையில், கோவையில் நீச்சல் குளம் அமைக்க அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.மேலும், ரூ.5 கோடியில் கோள மையம் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதே போல் அரசு பொருட்காட்சிக்கென நிரந்தர வளாகம் அமைக்க வேண்டும் என்றார்.
அரசு பொருட்காட்சியில் இடம் பெற்ற அரங்குகளில் கோவை நகர போலீஸ் அமைத்த அரங்கு முதலிடம் பெற்றது. இரண்டாவதாக, கோவைமருத்துவக் கல்லூரி அரங்கும், 3வது இடத்தை தாட்கோ அரங்கும் அதிக அளவில் மக்களைக் கவர்ந்ததாக அமைந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications