தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
லாரி டிரைவரைக் கடத்திய பீகார் அமைச்சர் டிஸ்மிஸ்
பாட்னா:
லாரி டிரைவரைக் கடத்திக் கொடுமைப்படுத்தியதாக புகார் கூறப்பட்ட பீகார் கூட்டுறவுத் துறைஅமைச்சர் லலித் குமார் யாதவை, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
லலித் குமார் யாதவ், தனது லாரி டிரைவர் மற்றும் கிளீனரைக் கடத்திக் கொடுமை, துன்புறுத்தியதாகபுகார் கூறப்பட்டது. இதையடுத்து அவரை நீக்க ராப்ரி தேவி முடிவு செய்தார். ஆளுநர் வினோத் சந்திரபான்டேவுக்கு இதுதொடர்பாக அவர் பரிந்துரை செய்தார். இதையடுத்து அமைச்சர் பதவி நீக்கம்செய்யப்பட்டார்.
லலித் குமாரை, கட்சியிலிருந்தும் முதல்வர் ராப்ரி நீக்கியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications