தமிழகத்தில் இன்று
சர்ச் குண்டுவெடிப்பு குறித்து தகவல் தந்தால் ரூ 5 லட்சம் பரிசு
பெங்களூர்:
பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சர்ச் அருகே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றுகர்நாடக புலனாய்வுத் துறை போலீஸ் (சி.ஓ.டி.) அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் ஜெகஜீவன்ராம்நகரில் உள்ள செயின்ட் பால் கிறிஸ்தவ தேவாலயத்தில் விழா நடந்தது. விழா முடிந்து மக்கள்வெளியே வந்து கொண்டிருந்த போது அங்கு திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
இச்சம்பவத்தில் தேவாலயத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து இதுவரை துப்புஏதும் கிடைக்கவில்லை.
பெங்களூர் தவிர, ஹூப்ளியிலும், குல்பர்கா மாவட்டத்தில் வாடியிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சமீபத்தில் குண்டுவெடித்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை நிருபர்களைச் சந்தித்த முதல்வர் கிருஷ்ணா ஹூப்ளி, மற்றும் வாடி குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து சி.ஓ.டி. விசாரணைக்குஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது பெங்களூர் தேவலாயத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்தும் அவர்கள் விசாரிப்பார்கள் என்றார்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து சி.ஓ.டி. டைரக்டர் ஜெனரல் வி.வி.பாஸ்கர் கூறுகையில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்தும், இதற்குப்பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் சரியான தகவல்கள் கொடுப்பவர்களுக்கு ரூ 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றார்.
மேலும், இதுகுறித்துத் தகவல்கள் கொடுக்க விரும்புபவர்கள் சி.ஓ.டி டைரக்டர் ஜெனரல் பாஸ்கரை 2254789 அல்லது 5295460 என்றதொலைபேசி எண்ணிலோ அல்லது 9844099706 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
ரயில்வே போலீஸ் டைரக்டர் ஜெனரல் சங்கிலியானாவை 5583969 அல்லது 5276188, தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல்கள்கொடுக்கலாம்.
அல்லது இணைப்போலீஸ் கமிஷனர் பி.என்.நாகராஜை 220092 அல்லது 2245321 என்ற தொலைபேசி எண்களிலும், 98440-70640 என்றமொபைல் எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம் என்றும் போலீஸ் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications