தமிழகத்தில் இன்று
தஞ்சையில் தி.மு.க பிரமுகர் வெட்டிக்கொலை
தஞ்சை:
தஞ்சாவூரில் தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
தஞ்சாவூரையடுத்துள்ள கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜராஜன். இவர் தஞ்சைமாவட்ட தி.மு.கபிரதிநிதியாக இருந்து வந்தார். மேலும் கோவிலூர் கிராம கிளை கழக பிரதிநிதியாகவும் இருந்தார்.செவ்வாய்க்கிழமை இரவு, அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் பைக்கில் தஞ்சையில் இருந்துசென்றிருந்தார்.
இருவரும் புன்னைநல்லூர் சுற்றுபுறச்சாலையை கடந்து சென்றனர். அப்பொழுது பின்னால் வந்த டாடா சுமோ கார்மோதியது. கார் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது.
பின்னர் சுமோவில் இருந்து இறங்கிய ஆறுபேர் கொண்ட மர்ம கும்பல் ராஜராஜனை அரிவாளால் வெட்டினர்.பலத்த வெட்டுப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மறுவினாடிஅந்த மர்ம கும்பல் தாங்கள் வந்த காரிலேயே தப்பிச்சென்றது.
ராஜராஜன் , சமீபத்தில் நடந்த கட்சித்தேர்தலில் அம்மாபேட்டை ஒன்றியச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டுஉள்ளார். ஆனால் இந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்து விட்டார். அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர்பதவிக்கு ராஜராஜன் போட்டியிடக்கூடாது என்று மிரட்டல் வந்துள்ளது. அதையும் மீறி அவர் போட்டியிட்டுஉள்ளார்.
அதன் காரணமாக சிலருக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துஇருந்ததாகவும், சமீபகாலமாக தஞ்சையில் உள்ள ஒரு ரவுடிக்கும்பல் தன்னை நோட்டம் விடுவதாக ராஜராஜன்தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அவர் தஞ்சை வந்ததையும் பின்னர் வீட்டுக்குதிரும்பிச்செல்வதையும் பார்த்த அந்த கும்பல் சரியான இடத்தில் வைத்து அவரை தீர்த்துகட்டிவிட்டு தப்பிச்சென்றுஇருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி தஞ்சை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications