தமிழகத்தில் இன்று
போலீசுக்கு "டாட்டா காட்டிய நிதி நிறுவன அதிபர்
சென்னை:
நிதி நிறுவனம் நடத்தி மக்கள் பணத்தை மோசடி செய்து விட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிவந்த நிதி நிறுவன அதிபர், தனது இரண்டாவது மனைவியுடன் திடீரென்றுதலைமறைவாகி விட்டார்.
இவரைப் பற்றி தகவல் கொடுக்கும்படி பொருளதார குற்றப்பிரிவு போலீசார்பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுதுள்ளனர்.
சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் ஒமேகா பைனான்ஸ் அன்ட் சிட்ஸ் என்றநிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் பிரபு. இவரது சொந்த ஊர் மதுரை. அதிக வட்டிதருவதாக ஆசை காட்டி, கோடிக் கணக்கில் மக்களிடம் பணம் "கறந்தார்
1996ம் ஆண்டு நிதி நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக வீழ்ச்சி அடைந்தபோது, ஒருநாள் இரவில் ஒமேகாவுக்கு மூடு விழா நடத்தி விட்டு கோடிகளுடன் மாயமாகிவிட்டார் பிரபு. பணத்தை போட்ட மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிரபுவைபற்றிய விஷயங்கள் வண்டி வண்டியாக வெளியானது.
பிரபுவுக்கு இரண்டு மனைவிகள். ஒருவர் ரபேகா, இன்னொருவர் சுபாஷினி. இரண்டுஅழகான மனைவிகளுக்கும் தனித்தனியே ஆடம்பர பங்களாக்கள். ஆடம்பரத்திற்கும்,உல்லாசத்திற்கும் பஞ்சமில்லாமல் வாழ்ந்தார் "மகா பிரபு.
மக்கள் பணம் குவிந்ததால், எப்படி செலவிடுவது என்று தெரியாமல் ஆடம்பரபங்களாக்களை வெறுத்து விட்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கேம்ப் போட்டார்.சினிமா பிரபலங்களுடன் இரவுகளை கழித்தார்.
இதற்கிடையில் காரியத்திலும் கண்ணாக இருந்தார். தனது பெயரிலும், மனைவிகள்பெயரிலும் நிலங்களையும், வீடுகளையும் வாங்கிப் போட்டார். போதாதற்கு தனதுதங்கை சாந்தி பெயரிலும் ஏகப்பட்ட சொத்துக்கள் வாங்கினார்.
இந்த விவரங்கள் எல்லாம் வெளியானதும் போலீஸ் உஷாராகி விரித்த வலையில் பிரபுகுடும்பம் சிக்கிக் கொண்டது. கைது செய்து கூண்டில் ஏற்றினர். ஆனால், ஜாமீன் பெற்றுவெளியே வந்த பிரபு, வழக்கு விசாரணையை சந்தித்து வந்தார். இப்போதுபோலீசுக்கும், கோர்ட்டுக்கும் டாட்டா காட்டி விட்டு இரண்டாவது மனைவியானசுபாஷினியுடன் தலைமறைவாகி விட்டார்.
இவர்கள் இருவர் பற்றிய தகவல்கள் தெரிந்தால் தகவல் தரும்படி பொருளாதாரகுற்றப்பிரிவு ஐ.ஜி. பாலசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications