தமிழகத்தில் இன்று
முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் விஜயகாந்த்
சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் விஜயகாந்த் தலைமையிலான அணியினர், சென்னை கோட்டையில் தமிழக முதல்வர் கருணாநிதியைசந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.
கடந்த 9-ம் தேதி நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஜயகாந்த் தலைமையிலான அணியினர் மாபெரும் வெற்றி பெற்றனர். தென்னிந்திய நடிகர்சங்கத் தலைவராக விஜயகாந்த், செயலாளராக நடிகர் சரத்குமார் ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்ற நிர்வாகிகளுக்கு நடந்ததேர்தலில் விஜயகாந்த் அணியினரே அமோக வெற்றி பெற்றனர்.
எதிர்த்துப் போட்டியிட்ட டைரக்டர் விசு, எஸ்.வி.சேகர் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
வெற்றி பெற்ற விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன் ஆகியோர் தலைமையில் நடிகர் சங்கத்தினர் புதன் கிழமை காலை கோட்டையில் முதல்வர்கருணாநிதியைச் சந்தித்தனர். விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன் ஆகியோருக்கு பொன்னாடைகள் அணிவித்து முதல்வர் வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் மற்ற நிர்வாகிகளான நடிகர்கள் வி.கே.ராமசாமி, சத்யராஜ், நாசர், முரளி, பார்த்திபன், காளை, அலைகள் செல்வகுமார், கே.கண்ணன்,எம்.ராஜேந்திரன், டி.எஸ்.ராஜா, கே.ஆர்.செல்வராஜ், ஆர்.தங்கராஜ், ஆர்.வீரமணி, நடிகைகள் மனோரமா, ரேவதி, குஷ்பு, பசி சத்யா, தமிழ்ச்செல்விஆகியோரும், சங்க உறுப்பினர்கள் நடிகர்கள் தியாகு, விக்னேஷ், கரண், பாண்டியன், உதயா, அலெக்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர்கள் ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சந்திக்க மறுத்து விட்டனர். அவர்கள் இருவரும்சமீபத்தில் தான் அ.தி.மு.கவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடனை அடைப்போம் வாருங்கள்.. நடிகர்களை அழைக்கிறார் விஜயகாந்த்
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications