தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

காணாமல் போன கப்பல் ஊழியர் மனைவிக்கு நஷ்டஈடு

சென்னை:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கப்பலில் பணியாற்றச் சென்ற கணவர் காணாமல் போனது தொடர்பாக அவரது மனைவிக்கு ரூ.10 லட்சம்இடைக்கால நஷ்ட ஈடு அளிக்குமாறு செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் லதா ராணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செயதார்.அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

சென்னையை சேர்ந்த செட்டி நாடு சிமென்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது "எம்.வி.செட்டி நாடு பிரின்ஸ் என்ற கப்பல். எனது கணவர் பிரேம்சந்த் சாஸ்தா ஒருபொறியாளர். இந்த கப்பல் நியூ ஓர்லியன்ஸ் துறைமுகத்தில் இருந்து வெர்ஸ்குரூஸ் துறைமுகத்திற்கு செல்லும் போது இதில் பொறியாளர் பணிக்கு எனது கணவர்நியமிக்கப்பட்டார்.

கப்பலில் பணிபுரிவதற்காக கடந்த 97ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிருந்து அமெரிக்கா சென்றார். அங்கு சென்ற பிறகு, கப்பலில் ஏறுவதற்கு முன்புஎன்னிடம் தொலைபேசியில் பேசினார். பின்னர் 98-ம் ஆண்டு கப்பல் கேப்டன் அறையில் இருந்து என்னுடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, தான் களைப்புற்று இருப்பதாகவும், கப்பலில் இருந்து இறங்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். அதையடுத்து நான் கப்பல் கேப்டனிடம்பேசினேன். அவரும், எனது கணவர் பணியில் இருந்து விடுபட விரும்புவதாக தெரிவித்தார்.

இதையடுத்து 1998ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி கப்பல் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் இரண்டு பேர் ஆழ்வார் திருநகரில் உள்ள எனது வீட்டுக்குவந்தனர். எனது கணவர் காணாமல் போய் விட்டதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

பின்னர் மீண்டும் கப்பலில் உள்ள பொறியாளரை நான் தொடர்பு கொண்டு பேசினேன். தூதரக அதிகாரிகளிடம் பேசினேன். மெக்சிகோவில் இருந்துஎனக்கு பேக்ஸ் செய்தி வந்தது. அதில் எனது கணவர் கப்பலின் மேல் தளத்தில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

எனது கணவருக்கு கப்பல் பணியில் 24 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. எனவே அது நம்பும்படியாக இல்லை. எனது கணவரை சட்டவிரோதமாக கப்பல்நிறுவனம் காவலில் வைத்திருக்கலாம் அல்லது அவரது உடலை வைத்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். எனவே எனது கணவரை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

சட்டப்படி கப்பல் உரிமையாளர் எனக்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கற்பக விநாயகம், சதாசிவம் ஆகியோர் அடங்கிய "டிவிசன் பெஞ்ச் விசாரித்து, கப்பல் பயணத்தின்போது1998-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி பிரேம் சந்த் காணாமல் போய் விட்டதாக பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து இன்னும் யாராலும் சரியான தகவலை அளிக்க இயலவில்லை. எனவே சட்டப்படி இடைக்கால நஷ்ட ஈடுவழங்க வேண்டும். மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இடைக்கால நஷ்ட ஈடு வழங்க செட்டி நாடு சிமென்ட் நிறுவனத்திற்கு உத்தரவிடுகிறாம் என்று தீர்ப்புவழங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+