தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் கட்சியைத் "தேற்ற மண்டல மாநாடுகள்

சென்னை:

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த மண்டல அளவில் மாநாடுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களுக்கான மண்டல மாநாடு அடுத்த மாதம் பெங்களூரில்நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா இம்மாநாட்டில் பங்கேற்கிறார் என்றுகாங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் நட்வர்சிங், அனில் சாஸ்திரி ஆகியோர் சென்னையில்சனிக் கிழமை தெரிவித்தனர்.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நட்வர்சிங், அனில் சாஸ்திரி ஆகியோர் சென்னைவந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் அவர்கள் செய்தியாளர்களுக்குபேட்டி அளித்தனர். பேட்டி வருமாறு:

இலங்கை பிரச்னையில் இந்தியா தலையிடக் கூடாது என்ற வாதம் சரியல்ல. இலங்கைபிரச்னையில் இஸ்ரேலும், பாகிஸ்தானும் தலையிடும் போது, இந்தியா தலையிடாமல்இருப்பது தான் தவறு.

இலங்கைக்கு என்ன தேவை என்பதையாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டியதுஅவசியம். வெளியுறவுக் கொள்கை என்பது வேறு, ராஜதந்திரம் என்பது வேறுஎன்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

காஷ்மீர் சுயாட்சி விவகாரத்தில் இந்திய அரசு சரியான அணுகுமுறையை கையாளத்தவறுகிறது. 1975ம் ஆண்டு இந்திரா காந்திக்கும்,. ஷேக் அப்துல்லாவுக்கும் இடையேஏற்பட்ட உடன்பாட்டின் படி காஷ்மீர் சுயாட்சி பிரச்னையை மத்திய அரசு தீர்க்கவேண்டும் என்றார் நட்வர்சிங்.

அனில் சாஸ்திரி கூறுகையில், நாடு ழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 காங்கிரஸ்தலைவர்கள் மூலம் வட்டார அளவில் பயிற்சி கேம்ப்கள் நடத்த காங்கிரஸ் தலைவர்சோனியா முடிவு செய்துள்ளார்.

இது தவிர, மண்டல அளவிலும் மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. தென்மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிற்கான மாநாடு பெங்களூரில்அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் சோனியா கலந்துகொள்கிறார்.

தமிழகத்தில் கட்சியில் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் மீறுபவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். திண்டிவனம் ராமமூர்த்திக்கு அனுப்பப்பட்டநோடடீஸ்க்கு பதில் அனுப்பியுள்ளார். அதுபற்றி காங்கிரஸ் மேலிடம் ஆராய்ந்துவருகிறது.

புதிய தலைவர் இளங்கோவனுக்கு எல்லாரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றுசோனியா கட்டளையிட்டுள்ளார். அதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைஉண்டு. தங்கபாலு தனிக் கூட்டம் போட்டதெல்லாம் கட்சி ஒழுங்கு மீறல் ஆகாதுஎன்றார் சாஸ்திரி..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+