தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

காவிரி: துரோகம் இழைத்து விட்டார் கருணாநிதி என்கிறார் ஜெ.

சென்னை:

காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு தரப்பட வேண்டிய ஜூன் மாதத் தண்ணீரைஆகஸ்ட் மாதத்தில் பெற ஒப்புக் கொண்டதன் மூலம் முதல்வர் கருணாநிதி புதியதுரோகம் இழைத்துள்ளார் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாகண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சனிக் கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டுக்கு காவிரியில் போன ஜூன் மாதம் திறந்து விட வேண்டிய நீரின்மிச்சமான, 6 டி.எம்.சி. தண்ணீரை அடுத்த ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் திறந்து விடகர்நாடகா சம்மதித்ததாக செய்திகள் வந்துள்ளன. இதன் மூலம் பிரதமர் தலைமையில்அமைக்கப்பட்ட நான்கு மாநில முதல்வர்களை உறுப்பினர்களாகக் கொண்ட காவிரிநதி நீர் ஆணையம் தமிழக விவசாயிகளை வழக்கம் போல வஞ்சித்துள்ளது.

கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய காவிரி நீர் பாக்கி 14டி.எம்.சி. என்று இருக்கும்போது, கருணாநிதி வெறும் 6 டி.எம்.சி. தண்ணீரை வாயைமூடிக் கொண்டு பெற்றுக் கொள்ள சம்மதித்து உள்ளதும், அதுவும் 30 நாட்கள்காலத்தில் தான் வரும் என்பதும் கண்டனத்திற்குரியது.

காவிரியில் நடுவர் மன்ற இடைக்கால ஆணையின்படி மாதம்தோறும் விடுவிக்கவேண்டிய தண்ணீரை விடுவிக்காமல் நடந்து வரும் அலட்சியப் போக்கை முடிவுக்குகொண்டு வர இதுவரை எந்த முயற்சியையும் கருணாநிதியும், கருணாநிதி அங்கம்வகிக்கும் மத்திய அரசும் மேற்கொள்ளவில்லை.

கடந்த மாதம் தர வேண்டிய தண்ணீரை பெற ஒப்புக் கொண்டதன் மூலம் கருணாநிதிபுதிய துரோகத்தை தமிழகத்திற்கு இழைத்துள்ளார்.

கடந்த மே 19ம் தேதி டெல்லியில் நடைபெறுவதாக இருந்த காவிரி நதி நீர் ஆணையக்கூட்டம், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கலந்து கொள்ளாத காரணத்தால் ஒத்திப்போடப்பட்டது.அந்த கூட்டம் நடைபெறவே இரண்டு மாதம் கடந்து போய் விட்டது.

தமிழகத்தின் உயிர் பிரச்சினையான காவிரிப் பிரச்னையில் கருணாநிதிக்குஉள்ளபடியாகவே அக்கறை இல்லை. காவிரியில் நடுவர் மன்ற இடைக்காலஆணைப்படி வாரம் தோறும் விடுவிக்க வேண்டிய தண்ணீரை உறுதியாக விடுவிக்கவேண்டும் என்று வற்புறுத்தும் தெம்பும் திராணியும் கருணாநிதிக்கு இல்லை.

6 டி.எம்.சி. தண்ணீர் 30 நாட்களுக்குள் திறந்து விடப்படும் என்று கர்நாடக முதல்வர்அறிவித்திருப்பதைப் பாராட்டி மகிழும் கருணாநிதியை பார்த்து தமிழக மக்கள்பரிதாபப்படுகின்றனர். ஜூன் மாதத் தண்ணீரை பெறவே ஆகஸ்ட் மாதம் என்றால்,ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குரிய தண்ணீரை கருணாநிதி எப்போது கேட்டுப் பெறுவார்என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

இந்த லட்சணத்தில் பாண்டிச்சேரிக்கு தேவையான தண்ணீரைத் தமிழகம் வழங்கும்என்று மத்திய அமைச்சரவைச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விவசாயப்பணிகளை முழு வீச்சில் தொடங்கி விட்ட விவசாயிகளுக்குப் போதிய அளவுக்குத்தண்ணீர் விடுவிக்கப்படவில்லை என்ற மனக்குறை இருக்கிறது.

பல்வேறு சிரமங்களுக்கு இடையில் விவசாய வேலைகளை ஆரம்பித்துள்ள நிலையில்,விவசாயிகளின் வீடுகளில் புகுந்து தட்டு முட்டு சாமான்களை வெளியே தூக்கிப்போடும் ஜப்தி நடவடிக்கைகளில் கருணாநிதி அரசு ஈடுபட்டு வருகிறது.

ஜப்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்தி விவசாயிகளை அல்லல்படுத்தும் கருணாநிதிஅரசை எதிர்த்து 31ம் தேதி அ.திமு.க .ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழக மக்கள்பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் ரூ.9.50க்கு வாங்க வேண்டிய மரக் கன்றைரூ.155 வாங்கி பல கோடி மோசடியில் ஈடுபட்ட கருணாநிதியும், அவரது கும்பலும்காவிரிப் பிரச்னையில் புதிதாக இழைத்த துரோகத்தை கண்டிக்கிறேன் என்றுஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+