தமிழகத்தில் இன்று
அரிசி கடத்தலைத் தடுக்க 20 சிறப்பு போலீஸ் படைகள்
சென்னை:
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கையில்இறங்குகின்றனர்.
மாநிலத்தின் எல்லையோரப் பகுதிகளை கண்காணிப்பதற்கென 20 விசேஷப் படைகள்அமைக்கப்பட்டுள்ளன. இப்படைகள் திங்கள் கிழமை முதல் அதிரடி நடவடிக்கையில்இறங்குகின்றன என்று தமிழ்நாடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் ராஜா தெரிவித்தார்.
சென்னையில் சனிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பெட்ரோலியப் பொருட்கள் கலப்படம் செய்து விற்கப்படுவதாக தகவல்கள்வந்துள்ளன. இதை தடுப்பதற்காக பென்சிலின், நாப்தா போன்ற பெட்ரோலியப்பொருட்களை வாங்குவதில் கட்டுப்பாடு விதித்து அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
இச்சட்டப்படி பெட்ரோலில் பென்சிலின், நாப்தா போன்ற பொருட்கள் கலந்துவிற்கப்படுவதை தடுக்க அதிரடிச் சோதனை செய்ய டி.எஸ்.பி. அந்தஸ்தில் உள்ளஅதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அப்படி சோதனை செய்து, கைப்பற்றப்படும் போலி பெட்ரோலியப் பொருட்களைசேமித்து வைப்பதற்கு எங்களுக்கு வசதியில்லை. எரியும் தன்மை கொண்ட அந்தபொருட்களை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்க முடியாது. எண்ணெய்நிறுவனங்கள் அதை பாதுகாப்பாக வைக்க முன் வரவேண்டும்.
ரேஷன் அரிசி கடத்தல் ஒரு தொடர் கதையாக இருக்கிறது. இதை முற்றிலும் ஒடுக்க 20சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்படுகின்றன. 200 போலீசார் இவற்றில்ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு படைக்கு 2 சப் இன்ஸ்பெக்டர்கள், 2 தலைமைக்காவலர்கள், 20 போலீசார் உள்ளனர். இவர்களுக்கென ஒரு வேன் வழங்கப்படும்.
இப்படையினர் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, குடியாத்தம், கிருஷ்ணகிரி,ஈரோடு, கோவை, உத்தமபாளையம், குளித்தலை ஆகிய எல்லையோரப் பகுதிகளில்திங்கள் முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் கடத்தினாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications