தமிழகத்தில் இன்று
ரூ. 4 கோடியில் தமிழகத்தில் பசுமைப் போர்வைத் திட்டம்
சென்னை:
தமிழகத்தின் மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் போர்வை ஏற்படுத்தி மாசுஏற்படுத்துவதைத் தவிர்த்து சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக மத்திய அரசு, தமிழகஅரசுக்கு ரூ. 4.45 கோடி ஒதுக்கியுள்ளது.
இத்திட்டம் சென்னை, மதுரை,கோயம்புத்தூர்,சேலம், திருநெல்வேலி ஆகியமாநகராட்சிப் பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும்வனத்துறை மூலம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்திற்கு மாநில அரசு தனது பங்காக 55.7 லட்சம் ரூபாய் வழங்க ஒப்புதல்வழங்கியுள்ளது. மத்தியஅரசு 4 கோடி ரூபாயை மாநில மாசுக் கட்டுப்பாடுவாரியத்திற்கு அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2000- 2001ம் நிதியாண்டில் மரம்நடும் பணி மேற்கொள்ளப்படும்.
தமிழக வனத்துறை அளித்த மதிப்பீட்டின்படி இரண்டு மீட்டருக்கு மேல் உயரமுள்ளமரக்கன்றுகளை ஒரு வருட காலத்திற்குப் பராமரித்து மாநகராட்சி வசம்ஒப்படைப்பதற்கு, மரக்கன்று ஒன்றுக்கு 155 ரூபாய் செலவிட அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டில் இரண்டு மீட்டருக்கு மேல் உயரமுள்ள மரக்கன்று வளர்ப்பதற்கு 55ரூபாயும், மரக்கன்று நடுவதற்கு தேவையான இடங்களை தேர்ந்தெடுத்து குழிகள்தோண்டி, நட்டு, தண்ணீர் விட்டு பராமரிப்பதற்கு 90 ரூபாயும், இத்திட்டத்தினைமேற்பார்வை செய்யவும் இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான 20ரூபாயும் அடங்கும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பணமாக 2.80 கோடி ரூபாய்வழங்கவேண்டுமென வனத்துறையின் கோரிக்கையை ஏற்று இத் தொகையினைசெலவு செய்ய உரிமம் பெற்று செலவிட அனுமதியளித்துள்ளது.
திட்ட மதிப்பீட்டுத் தொகையான மொத்தம் 4.55 கோடி ரூபாயில் இதுவரை 38.19லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 700 மரக்கன்றுகள்மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பட்டுள்ளன.
நகராட்சிகளில் மரம் வளர்க்கும் திட்டம் எந்த வித தடங்கலும் இல்லாமல்செயல்படுவதற்காக மாநகராட்சி ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் வழஙக 75.50லட்சம் ரூபாயை மத்திய அரசு அளித்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications