தமிழகத்தில் இன்று
"தேவையில்லாமல் தொழிலாளர்கள் போராடுவதில்லை
ஈரோடு:
தொழிலதிபர்கள் தங்களது உரிமையை மறுக்கும் போது மட்டுமே தொழிலாளர்கள்போராடுகின்றனர். தேவையில்லாமல் அவர்கள் போராடுவதில்லை என்று தமிழகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ரங்கராஜன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் லயன்ஸ் கிளப் வடக்கு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில்கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர்ரங்கராஜன் பேசியதாவது:
மேற்கு வங்காளத்தில் மாநில அரசிற்கு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்றநோக்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சித்து செய்து வருகிறது எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் ரங்கராஜன்தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் தொழிற்சாலைகள் குறித்து தவறான கருத்தை பாரதியஜனதாவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் உருவாக்கி வருகின்றன. இந்தக் கட்சிகள்மற்ற மாநிலங்களிலிருந்து இந்த மாநலத்திற்கு தொழில் தொடங்க வரும்தொழிலதிபர்களைத் தடுத்து நிறுத்தி வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே மாநிலத்தில் தொழில் அமைதியை ஏற்படுத்தி வருகிறது.தொழிலதிபர்கள் உரிமைகளை மறுக்கும்போது மட்டுமே தொழிலாளர்கள்போராட்டத்தில் குதிக்கின்றனர்.
பால்பவுடர், சமையல் எண்ணெய்கள் உட்பட 714 வகையான பொருட்களைஇறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்ததனால், நமது நாட்டில் உள்ள சிறுதொழிற்சாலைகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. எனவே, அரசின் தவறானகொள்கையால், வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் என கம்யூனிஸ்ட் கட்சிஅஞ்சுகிறது.
நமது நாட்டில் சர்க்கரையும் தேயிலையும் அதிக அளவில் இருக்கும்போது, மேலும்இறக்குமதி செய்ய அரசு அனுமதித்துள்ளது.
நமது நாட்டில் தவறான பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டு விட்டதால், இதில்மாற்றம் கொண்டு வருவது மிகவும் கடினமானது என்று ரங்கராஜன் பேசினார்.
விழாவில் லயன்ஸ்கிளப் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலர் இளங்கோவன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications