தமிழகத்தில் இன்று
பிஜியில் மீண்டும் செளத்ரி பிரதமராக முடியாது: புரட்சிக்காரர்கள்
சுவா:
பிஜியில் மீண்டும் மகேந்திர செளத்ரி பிரதமராவதை நாங்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று புரட்சிக்காரர்களின் செய்தித்தொடர்பாளார்ஜோ நாடா தெரிவித்தார்.
பிஜியில் இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர பால் செளத்திரியும், அவரது அமைச்சரவை சகாக்களையும் புரட்சிக்காரர்கள் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு கடந்தமே மாதம் 19 ம் தேதி பிணைக்கைதிகளாகப் பிடித்து பாராளுமன்ற வளாகத்தில் சிறைவைத்தனர். பின்னர் ராணுவம் ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில் புரட்சிக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து முதலில் 9 பிணைக்கைதிகள்விடுவிக்கப்பட்டனர்.
அதற்குப்பின் பிரதமர் மகேந்திர செளத்ரியும், பிற அமைச்சர்களும் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து புரட்சிக்காரர்களின் செய்தித் தொடர்பாளர் ஜோ நாடா கூறுகையில், பிஜியில் ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னைப் பிரதமராகமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி.
ஆனால் அதற்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம். 56 நாட்களுக்குப்பின் விடுவிக்கப்பட்டதே பெரிய விஷயம். அதற்காக அவர்மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர மீண்டும் பிரதமர் பதவி வேண்டும் என்று அவர் கேட்பது முறையல்ல.
பிஜியில் பூர்வகுடியைச் சேர்ந்த ஒருவர்தான் பிரதமர் பதவியிலோ, அதிபர் பதவியிலோ இருக்க முடியும். அரசியல், நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்புபோன்றவற்றில் பிஜி பூர்வகுடிமக்கள் பயனடையும் வகையில் அவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும்.
பிஜி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அதிக சலுகைகள் எதையும் கொடுக்க முடியாது.
ராணுவத்தினரால் அதிபராக நியமிக்கப்பட்ட இடைக்கால அதிபர் கராசேவை நாங்கள் அதிபராக ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய பிரதமராக எபிலிகனாய்மாவியை நியமிக்க வேண்டும். புதிய அமைச்சரவையில் இரண்டு இந்தியர்களை சேர்க்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆஸி. உதவியை நாடுகிறது அமெரிக்கா:
இந்நிலையில் பிஜி பிரச்சனைக்குத் தீர்வு காணவும், புதிய அரசு அமைப்பதிலும் ஆஸ்திரேலியாவின் உதவியை நாடத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ராணுவசெகரட்டரி வில்லியம் கோஹன் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறினார்.
அவர் இதுகுறித்துக் கூறுகையில் ஏறத்தாழ 56 நாட்கள் நடந்த பிஜி பிரச்சனை முடிவுக்கு வந்தது குறித்து அமெரிக்கா மிகவும் மகிழ்ச்சியடைகிறது. பிஜியில்புதிய அரசு அமைப்பதில் ஆஸ்திரேலியா நாட்டுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தும்.
பிஜியில் வாழும் 8 லட்சம் மக்களில் 44 சதவீதம்பேர் இந்தியர்கள். அவர்கள் பொருளாதார நிலையில் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
நான் இரண்டு நாட்கள் சிட்னிக்குச் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறேன். அப்போது ஆஸ்திரேலியா ராணுவ செகரட்டரி ஜான் மோரியுடன் என்ன நடவடிககைஎடுப்பது என்பது குறித்துப் பேசுவேன் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications