தமிழகத்தில் இன்று
மணந்தால் பாலமுருகன் ... இல்லையேல் மரண தேவன்
மதுரை:
காதலனை மணம் முடிப்பதற்காக மண்ணெண்ணெய் டின்னைக் காட்டி மிரட்டி காதலனை மணந்தார்மதுரையைச் சேரந்த பெண் ஒருவர்.
தேவகோட்டை அருகே பழைய சருகனி சாலையில் வசித்து வந்தார் பாலமுருகன். 22 வயதாகும்இவருக்கும், நடராஜபுரத்தைச் சேர்ந்த மாலா என்ற 19 வயது பெண்ணுக்கும் காதல்.
மாலா வசிக்கும் வழியாக பாலமுருகன் செல்வது வழக்கம். மாலாவைக் கண்டதும் காதல்வயப்பட்டார் பாலமுருகன். இருவர் கண்களும் கண்ணோடு கண் நோக்க இதயங்கள் காதல் வயப்பட்டன.
இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணத்திற்கு தடை போடப்பட்டது.இருந்தும், இவர்கள் அடிக்கடி தனியே சந்தித்து பேசி வந்தனர். இதையறிந்த ஊர் மக்கள் காதல்தொடர்ந்தால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று எச்சரித்தனர்.
காதலுக்கு முன் ஊர்க் கட்டுப்பாடுகள் நிற்குமா?. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகஅவர்களது காதல் வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்தது. ஆனால் காதலுக்கானஎதிர்ப்பும் உடன் வளர்ந்தது.
இந்த நிலையில், மாலா தனது தாயார் ஜெயலட்சுமியுடன் பாலமுருகன் வீட்டுக்குச் சென்றார். பாலமுருகனின்தாயார் சுலோச்சனாவிடம் நானும் உங்கள் மகன் பாலமுருகனும் இரண்டு வருடமாககாதலக்கிறோம். எஙகள் இருவருக்கும் திருமணம் செய்து வையுங்கள் என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகனின் தாயார் பாலமுருகனை திருமணம் செய்து கொள்ளவரதட்சணை தரவேண்டும் என்றார். மாலா பாலமுருகணைப் பார்க்க அவர் தன் தாய் சொல்வதைஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தார்.
கோபமடைந்த மாலா தன் வீட்டிற்குச் சென்று மண்ணெண்ணெய் டின்னை எடுத்துக் கொண்டு பாலமுருகன்வீட்டிற்கு வந்தார். பின்னர் பாலமுருகன் தாயாரைப் பார்த்து, எங்கள் திருமணத்தை நடத்திவைக்காவிட்டால் இங்கேயே தீக்குளித்து விடுவேன் என மிரட்டினார்.
இதனால் ஊர் பெரியவர்கள் கூடினர். பஞ்சாயத்து நடந்தது. இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதெனமுடிவானது. ஊர் கோயிலில் திருமணம் செய்து வைத்தனர்.
மண்ண்ெணையைக் காட்டி காதலனை மணந்த கதைதான் இப்போது சருகணியின் ஹாட் டாபிக்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications