தமிழகத்தில் இன்று
திமுக அமைச்சர்கள் ரூ. 16 கோடி ஊழல் செய்ததாக கூறுகிறார் ஜெ.
சென்னை:
தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பறைப் பருப்புகொள்முதல் செய்வதற்கு மத்திய அரசின் நேஃபெட் ( NAFED) நிறுவனம் அளித்த ரூ.16 கோடி பணத்தை கொளளையடித்ததாக தி.மு.க. அமைச்சர்கள் மீது அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா புகார் கூறியுள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக்தில் உள்ள தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பறைப் பருப்பைக்கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசின் நேஃபெட்
நிறுவனம் அளித்த பணத்தில் 16 கோடி ரூபாயைக் கொள்ளை அடித்ததாகக் கூறப்படும்தி.மு.க. அமைச்சர்கள் கே.என். நேரு, என்,கே.கே. பெரியசாமி ஆகியோர் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொப்பறைப் பருப்புக் கொள்முதலில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல்குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். தென்னை விவசாயிகளிடம் மத்தியஅரசே நேரடியாக கொப்பறைப் பருப்பைக் கொள்முதல் செய்ய வேண்டும்.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தமிழ் நாட்டில் உள்ள தென்னை மரங்களில் ஒருவிதமான மர்ம நோயால் தாக்கியதன் காரணமாகத் தேங்காய் விளைச்சல் பெரிதும்பாதிக்கப்பட்டு மரங்கள் பட்டுப் போகிற நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இந்த நோய் பெருமளவு தென்னை மரங்களில் பாதிப்பைஏற்படுத்தியது. இப்போது திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் இந்த நோய்தாக்கியதன் காரணமாக தேங்காய் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
தென்னை விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ 20 ரூபாய்க்கு கொப்பறைப் பருப்பைவாங்கி கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு 32 ரூபாய் 50 பைசாவுக்கு சப்ளைசெய்வதாகவும், ஒரு கிலோவுக்கு 12 ரூபாய் 50 பைசா கொள்ளை அடிப்பதாகவும்தெரிவித்தார்கள்.
பட்டிவீரன்பட்டி, அவினாசி, ஈரோடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகியஇடங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மற்றும் தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே கொப்பறைப் பருப்பு கொள்முதல்நடைபெற்று வருகிறது.
தென்னை விவசாயிகளிடம் ஒரு குவிண்டால் கொப்பற்ைப் பருப்பை 2,000ரூபாய்க்குக் கொள்முதல் செய்கிற தி.மு.க.வினர் தங்களை விவசாயிகள் என்றுகூறிக்கொணடு போலியான சான்றிதழைக் கொடுத்து கூட்டுறவு சங்கங்களில் 3,250ரூபாய் விலையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, என்,கே.கே.பெரியசாமி ஆகியோரின் ஏஜெண்டுகள்மற்றும் பினாமிகளிடம் மட்டுமே கொப்பறைப் பருப்பை வாங்க வேண்டும் என்றுதமிழ்நாடு கூடடுறவு விற்பனை இணையத்தின் மூலம் வாய்மொழி உத்தரவுபிறப்பிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ள 12,700 டன் கொப்றைப் பருப்பிற்கு தேசியகூட்டுறவு விற்பனை இணையம் 41,27,50,000 ரூபாய் செலுத்தி இருக்கிறது. இதில்தி.மு.க. இடைத் தரகர்களும், பினாமிகளும் ஊழல் செய்து 15,87,50,000 ரூபாய்கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
கொப்பறைப் பருப்பை சப்ளை செய்யும் தி.மு.க.வினருக்கு உடனடியாக காசோலைகள்வழங்கப்பட்டு விடுகின்றன. வழக்கமாக 20,000 ரூபாய்க்கு மேல் காசோலைதரப்பட்டால் அது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு பணமாக்கும் வகையில் தான்வழங்கப்படும்.
ஆனால் போலி விவசாயிகள் பேரில் கொப்பறைப் பருப்பு சப்ளை செய்ததி.மு.க.வினருக்கு, அருகில் உள்ள மத்திய. கூட்டுறவு வங்கிகளில் இவர்கள்நேரடியாகப் பணம் பெற்றுக் கொள்ளும் வகையில் 3 லட்சம் ரூபாய்க்கானகாசோலைகள் வழங்கப்பட்டு உள்ளன.
கொப்பறைப் பருப்புக் கொள்முதலில் சுமார் 16 கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளதி.மு.க. அமைச்சர்கள் கே.என்.நேரு, என்,கே.கே. பெரியசாமி மற்றும் அவர்களுக்குஉடந்தையாக தி.மு.க.வினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமத்திய அரசைக் கேட்டுக் கொள்வதுடன், கொப்பறைப் பருப்புக் கொள்முதலை மத்தியஅரசே நேரடியாக செய்திட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications