தமிழகத்தில் இன்று
பிரபாகரன் கட் அவுட் வைத்து நிதி திரட்டும் கனடா தமிழர்கள்
டொரான்டோ:
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, கனடா தமிழர்கள் சாலைகளில் பிரபாகரன் கட் அவுட் வைத்து,கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுகின்றனர்.
இலங்கையில் நடந்து வரும் சண்டையில் இலங்கை ராணுவத்துக்கு எதிராக எந்த ஒரு சிறிய வெற்றியைப் புலிகள் பெற்றாலும் கனடா தமிழர்கள் தங்கள்நாட்டில் அந்த வெற்றியை பிரமாண்டமாக கொண்டாடுகின்றனர்.
இத்தகைய வெற்றிக் கொண்டாட்டமும், நிதி திரட்டு விழாவும் கனடாவின் முக்கிய நகரமான டொரான்டோவில் உள்ள குயினஸ் பார்க்கில் சமீபத்தில்நடைபெற்றன. மிகப் பெரிய அளவில் பிரபாகரனின் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
விடுதலைப் புலிகளுக்கான நிதி திரட்டும் விழா துவங்கிய சில மணி நேரங்களிலேயே கோடிக்கணக்கான ரூபாய் திரண்டுவிடுகிறது என்பதும், ஆண்டுதோறும்ரூ.100 கோடி அளவுக்கு விடுதலைப் புலிகளுக்கு கனடா தமிழர்கள் நிதி திரட்டித் தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு தீவிரவாத அமைப்பாக இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்துத், தடை விதித்துள்ளன. ஆனால், பிரிட்டன்,ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் அந்த இயக்கத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை.
இதையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிப்பதுடன், அந்தஇக்கத்துக்கு அதிக அளவில் நிதி திரட்டியும் வழங்குகின்றனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications