தமிழகத்தில் இன்று
சீன கால்பந்து ரசிகர்களின் 5 மணி நேர "அமர்க்களம்
பீஜிங்:
உள்ளூர் கால்பந்து அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்புத் தர ரெப்ரீ மறுத்துவிட்டதை அடுத்து ரசிகர்கள் திடீர் ரகளையில் ஈடுபட்டனர். கார்கள் மீது கல்வீச்சுநடத்தினர். ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
சீனாவின் வட பகுதியில் உள்ள ஸியான் நகரில் இச் சம்பவம் சனிக்கிழமை நடைபெற்றது.
சீனாவில் 2-ம் கட்ட கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஷாங்ஸி கோலியும்செங்க்டு உனியு அணியும் மோதின.
ஆட்டம் முடியும் தருவாயில் செங்க்டு உனியு அணியினரின் தவறான ஆட்டத்தால் ஷாங்ஸி அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைக்க இருந்தது. ஆனால்,பெனால்டி கிக் வாய்ப்புத் தர ரெப்ரீ மறுத்துவிட்டார். கடைசியில் அந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இதையடுத்து ஷாங்ஸி அணியின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து செங்க்டு உனியு அணி ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் மைதானத்தைவிட்டு வெளியே வந்த அவர்கள் கார்கள் மீது கற்களை வீசித் தாக்கினர்.
கடைகளின் பெயர்ப் பலகைகளையும் அவர்கள் சேதப்படுத்தினர். சுமார் 5 மணி நேரம் அவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். ரகளையின் உச்சக்கட்டமாகஅங்கிருந்த அரசு அலுவகங்களுக்குள் நுழைந்து சூறையாட முயன்றனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ரகளையில் ஈடுபட்ட கால்பந்து ரசிகர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இச் சம்பவத்தில்யாருக்கும் காயமில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications