தமிழகத்தில் இன்று
இருந்த ஒரு மானும் போச்சு!
புவனேஸ்வர்:
ஒரிஸ்ஸா மாநிலம் போலாங்கீர் மாவட்டத்தில் உள்ள கந்தமர்தான் விலங்கியல் பூங்காவில் இருந்த ஒரே மான் கொல்லப்பட்டுள்ளது.
கந்தமர்தான் விலங்கியல் பூங்காவில் ஒரே ஒரு ஆண் மான் மட்டுமே உண்டு. தற்போது அந்தப் மானின் இறந்த உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்எலும்புகளும், சிதைந்த சதைகளும்தான் கிடைத்துள்ளன. இந்தப் மான் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் அம்பாசடர் காரில் பூங்காவிற்குள் வந்துள்ளதாகவும், மானை அவர்கள் வலை போட்டுப் பிடித்துச் சென்றதாகவும்,வியாழக்கிழமை இரவு வனத்துறை அதிகாரிகளுக்கு ஒரு நபர் போனில் தெரிவித்துள்ளார். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் பூங்கா முழுவதும்மானைத் தேடினர். ஆனால் அது கிடைக்கவில்லை.
இந்த நிலையில், மானின் இறந்த உடல் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது. போனில் மர்ம மனிதர் கூறிய ஐந்து பேர்தான் மானைக் கொன்றிருக்கவேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். மரக்கட்டையால் மான் அடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொன்ற பிறகு கறியைசமைத்துச் சாப்பிட்டுள்ளனர்.
கந்தமர்தான் விலங்கியல் பூங்கா அமைந்துள்ள ஹரிசங்கர் வனப் பகுதியில், 46 ஆண் மான்களும், 57 பெண் மான்களும் உள்ளன. கந்தமர்தான், இரண்டுஆண்டுகளுக்கு முன்புதான் விலங்கியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இங்கு ஒரே ஒரு ஆண் மான்தான் இருந்து வந்தது. அதுவும் இப்போது கொல்லப்பட்டுவிட்டது.
ஒரிசாவில் தற்போது மொத்தம் 1500 மான்கள், பல்வேறு விலங்கியல் பூங்காக்களில் உள்ளன. சமீபத்தில் நந்தகனான் விலங்கியல் பூங்காவில் 12புலிகள் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications