தமிழகத்தில் இன்று
மேட்ச் பிக்ஸிங் என்றால் என்ன..? கேட்கிறார் டெண்டுல்கர்
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் சுத்தமானவன் என்று நாடு அறியும் என்றார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
அவுட் லுக் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டி:
மேட்ச் பிக்ஸிங்கில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டதாக வந்த புகார்களைக் கேட்டதும் முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதுதாற்காலிகமானதுதான்.
மேட்ச் பிக்ஸிங்கால் கிரிக்கெட் விளையாட்டு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்துவிட்டது உண்மைதான் என்றாலும், விரைவில் கிரிக்கெட்மீண்டும் புதுப் பொலிவு பெறும்.
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மேட்ச் பிக்ஸிங் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப் பிரச்சினையில் தலையிட நான்விரும்பவில்லை. நான் சுத்தமானவன் என்று இந்த நாடே அறியும்.
மேட்ச் பிக்ஸிங் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருந்தால் எனது கருத்தைத் தெரிவித்திருப்பேன். மேலும் மேட்ச் பிக்ஸிங் பற்றி யார் சொல்வது சரி, யார்சொல்வது தவறு என்று என்னால் சொல்ல முடியும். ஆனால், எனக்கு மேட்ச் பிக்ஸிங் பற்றி எனக்குத் தெரியாது.
எனக்கு மேட்ச் பிக்ஸிங் பற்றி எல்லாம் தெரியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளது உண்மையல்ல.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் பற்றி தங்கள் மனதில் இருப்பதைச் சொல்ல அவர்களுக்குச் சுதந்திரம் உண்டு. ஆனால், மேட்ச் பிக்ஸிங்பற்றி போன்ற முக்கிய மற்றும் சிக்கலான பிரச்சினை பற்றி கருத்துச் சொல்வது அவர்களது விருப்பத்தைப் பொறுத்தது.
மேட்ச் பிக்ஸிங் பற்றி கருத்துச் சொல்ல ஒருவர் முன்வந்தால், அதற்குத் தகுந்த ஆதாரங்களை வைத்திருக்கவேண்டும். வதந்திகளைப் பரப்பக் கூடாது.இல்லையென்றால் கிரிக்கெட் விளையாட்டு கடுமையாகப் பாதிக்கப்படும்.
எனது ஆட்டத்தின் மீது நான் கவனம் செலுத்த விரும்பியதால்தான் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணிதோல்வியடைந்தது தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்தது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நான் எனது ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. அதனால் நான் சரியாக ஆடவில்லை. இந்திய அணி தோற்றதற்குஅதவும் ஒரு காரணம்.
விரைவில் இந்திய அணி வெற்றிகளைக் குவிக்கும். இந்திய அணியின் பின்னடைவு தாற்காலிகமானதுதான் என்றார் டெண்டுல்கர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications