தமிழகத்தில் இன்று
பாட்னா விமான விபத்து குறித்து விசாரணை துவங்கியது
கல்கத்தா:
பாட்னா அருகே இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறித்த விசாரணை துவங்கியது.
டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் (டி.ஜி.சி.ஏ.) இந்த விசாரணைக்கு உத்தரவிட்டார். டி.ஜி.சி.ஏவின்கல்கத்தா மண்டல கட்டுப்பாட்டு அதிகாரி பி. ஷா இந்த விசாரணையை நடத்துவார். இந்த விசாரணைக் குழுவுக்குடி.ஜி.சி.ஏ. டைரக்டர் கோலா தலைமை வகிப்பார்.
விபத்தில் சிக்கியது மிகப் பழைய விமானமாகும். கடந்த 20 ஆண்டுகளாக இது இந்தியன் ஏர்லைன்சால்இயக்கப்பட்டு வருகிறது. பழைய விமானம் என்பதால் தான் விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள்கூறப்படுகின்றன.
பழைய விமானமாக இருந்தாலும் கடந்த ஜனவரியில் தான் இதன் தரம் சோதிக்கப்பட்டு சிறப்பாக உள்ளதாகசான்றிதழ் வழங்கப்பட்டதாக இந்தியன் ஏர்லைன்ஸ் கூறுகிறது.
உலகெங்கும் இப்போது சுமார் 522 போயிங் 737, 300, 100 ரக பழைய விமானங்கள் இயக்கப்பட்டுவருவதாகவும், இவை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பறந்து வருகின்றன எனவும் ஏர்லைன்ஸ் கூறுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications