தமிழகத்தில் இன்று
சிட்னி ஒலிம்பிக்: துப்பாக்கி பயன்படுத்த வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை
கான்பரா:
சிட்னியில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு அணியினருக்குப் பாதுகாப்பாக அந் நாட்டின் பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதியில்லை என்று ஆஸ்திரேலியாதெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அட்டர்னி ஜெனர் டேரில் வில்லியம்ஸ் கூறியதாவது:
சிட்னி நகரில் செப்டம்பர் 15-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில்175-க்கும் அதிகமான நாடுகளின் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஒலிம்பிக் போட்டிகள் அமைதியாகவும், நல்லபடியாகவும் நடைபெறுவதற்கானஅனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டுள்ளது.
ஆகவே, வெளிநாட்டு அணியினருக்குப் பாதுகாப்பாக அந் நாட்டு பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது.
பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ள அமெரிக்கா, இஸ்ரேல் போன்றஅனைத்து நாடுகளின் பாதுகாப்புப் படையினருக்கும் இத் தடை பொருந்தும் என்றார்வில்லியம்ஸ்.
துருக்கி, இஸ்ரேல், அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஈரான், ஈராக் உள்ளிட்ட 12 நாடுகள்,தங்களது நாட்டு அணிக்குப் பாதுகாப்பாக வரும் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிவைத்துக் கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று கோரியுள்ளதாக பத்திரிக்கைகளில்செய்தி வெளியாகின.
இதையடுத்து மேற்கண்ட விளக்கத்தை வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுஅணியினருடன் அந்த நாடுகளின் பாதுகாப்புப் படையினர் வரலாம். ஆனால்,ஆஸ்திரேலியாவில் அவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லைஎன்றார் அவர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications