தமிழகத்தில் இன்று
இந்த நாட்டில் சட்டத்தின் பயணம் இருவகைப்பட்டது. சாதாரண மக்களைப் பொறுத்தவரையில், சட்டம் சீறிப்பாயும்; விழுந்து கடிக்கும் - இது ஒருவகைப்பயணம்.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில், சட்டம் தயங்கி நிற்கும்; பதுங்கிச் செல்லும்; ஒளிந்து ஒதுங்கி விடும். விசாரணை தாமதங்கள், வாய்தாக்கள்,சாட்சிகளின் பல்டி, நீதிபதிகள் மாற்றம் - என்ற பல வகையான வசதிகளைப் பெற்று, அரசியல்வாதிகள் சட்டத்தினால் தீண்டப்படாமல் தப்பிப்பார்கள்.
இதை பல விசாரணைகளில் நாம் கண்டு வந்திருக்கிறோம். இப்போது சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே இந்த சட்ட தத்துவத்தை மீண்டும் நிலைநாட்டமுனைந்துள்ளார்.
மஹாராஷ்டிரத்தில் 1993-ல் நடந்த மதக் கலவரங்களின் போது , தனது பத்திரிக்கையில் பால் தாக்கரே எழுதிய கருத்துக்கள், மத விரோதத்தைத்தூண்டுபவையாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற செயல்களை வளர்ப்பவையாகவும் அமைந்தன - என்ற விசாரணைக் கமிஷனின் அறிக்கை,சிவசேனை - பா.ஜ.க. அரசினால் குப்பைக் கூடையில் போடப்பட்டது.
அதையொட்டி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது, பத்து மாதங்களுக்கு முன்பாக பதவியேற்ற காங்கிரஸ் தலைமையிலான மஹாராஷ்டிரஅரசு, பால் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க, போலீசுக்கு அனுமதி அளித்திருக்கிறது.
இந்த அனுமதி அளிக்கப்பட்ட உடனேயே பால் தாக்கரே, என் மீது கை வைத்தால் நாடே பற்றி எரியும் என்ற மிரட்டல் அறிக்கையை வெளியிட்டார்.
உடனே மஹாாரஷ்டிரத்தில் சிவசேனையினர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். பொதுச் சொத்துக்கு நாசம் ஏற்பட்டது. மஹாராஷ்டிர அரசுஇன்னமும் பால் தாக்கரேயை கைது செய்யவில்லை.
சிவசேனை - பா.ஜ.க. அரசு ஆட்சி செய்த போது ஒளிந்து ஒதுங்கி விட்ட சட்டம், இப்போது வெளியே வந்தாலும், ஓர் அங்குலம் கூட முன்னேற முடியாமல்தயங்கி நிற்கிறது.
பால் தாக்கரேயை கைது செய்தால் என்ன நேரிடுமோ என்ற மாநில அரசின் அச்சமே இதற்குக் காரணம்.
இது ஒரு புறமிருக்க, சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி, பால் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்கான காலக்கெடு கடந்து விட்டது.என்று சொல்லி, அதனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மாநில அரசுக்கு மத்திய அரசு எடுத்துக் கூறும் என்றுஅறிவித்தார்.
சட்ட நிபுணரும், மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லியும் சட்டப்படியான காலக்கெடு கடந்து விட்டதால், இதில் நடவடிக்கைக்கு இடமில்லை என்றுகூறியிருக்கிறார்.
இந்த இரண்டு சட்ட நிபுணர்களும் கூறியிருப்பது பாதி உண்மை. முழு உண்மையையும் அறிய சட்டத்தைப் பார்ப்போம்.
மத விரோதத்தைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்படுகிறவர்கள் மூன்று வருட சிறைவாசம் வரைதண்டனை பெறக்கூடிய குற்றத்தைச் செய்தவர்களாகிறார்கள்.
பால் தாக்கரே மீது இந்தக் குற்றச்சாட்டுதான் சுமத்தப்படும் என்று ஹேஷ்யமாக கூறப்படுகிறது. மூன்று வருடத்திற்குள்ளாக சிறைத் தண்டனைபெறக்கூடிய குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மூன்று வருடத்திற்குள்ளான சிறைத் தண்டனை பெறக்கூடிய குற்றங்கள் மீது நடவடிக்கைஎடுக்க,மூன்று வருட காலக் கெடுவை சட்டம் விதித்திருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications