இன்று திரும்புவாரா கோபால்? காத்திருக்கும் அரசுகள்
ஈரோடு:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையாக வீரப்பனிடம் தூது சென்ற நக்கீரன் கோபாலிடமிருந்துஉருப்படியான தகவல்களோ, பதிலோ இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று நக்கீரன் கோபால்திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் ஏற்கனவே வீரப்பனைச் சந்தித்து பிணைக் கைதிகளை மீட்கபேச்சுவார்த்தை நடத்திய நக்கீரன் கோபால் இம்முறையும் சென்றுள்ளார்.
காட்டுக்குள் வீரப்பனைச் சந்தித்து அனுபவப்பட்ட நக்கீரன் கோபால், இம்முறை தன்னுடன் இரண்டுநிருபர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் இதுவரை அவர் வீரப்பனைச் சந்தித்தார் என்ற தகவல்மட்டுமே நக்கீரன் அலுவலகத்திலிருந்து தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. இந்த தகவலைத் தவிர வேறு எதுவும்முதல்வர் கருணாநிதிக்குத் தெரிவிக்கப்படவில்லை.
நக்கீரன் கோபால், காட்டுக்குள் வீரப்பனைச் சந்தித்த பின்னர், தற்போது கிடைத்துள்ள 10 கோரிக்கைளுக்கும் அரசுஎன்ன பதில் சொல்கிறது என்பது தெரிந்த பின்னரே, கோபால் காட்டை விட்டு நாடு திரும்புவார் எனஎதிர்பார்க்கப்பட்டது.
நக்கீரன் கோபால் சந்திப்பால் பேச்சுவார்த்தையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதும் இதுவரைவெளியாகவில்லை. இதனையடுத்து நக்கீரன் கோபால் திரும்பி விட்டாரா, என்பது பற்றிய தகவல்கள்கிடைக்கவில்லை.
நக்கீரன் கோபால் தகவல்களை வெளியிட்டால், மற்ற பத்திரிக்கைகள் அவற்றைப் போட்டு விடும். எனவே, அடுத்துதனது நக்கீரன் பத்திரிக்கையில் எழுதவே எவ்வித தகவல்களையும் அவர் வெளியிடவில்லை என்ற தகவல்களும்கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications