தமிழகத்தில் விபத்தில் சிக்கிய வெளிநாட்டவர்கள் திரும்பினர்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே சமீபத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 12 பேர் காயமடைந்தனர்.
உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து தங்கள் தாய்நாட்டுக்கு தனி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்மூலம் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி அருகே பஞ்சபூரில் கடந்த 14-ம் தேதி ஒரு வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இவ் விபத்தில் 3 பேர் இறந்தனர். 19 பேர்காயமடைந்தனர்.
இந்த காயமடைந்த 19 பேரில் நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications