300-வது நீர் மின் நிலையத்தை அமைக்கிறது பெல் நிறுவனம்
டெல்லி:
மத்திய அரசு நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனம் (பெல்), தனது 300-வது நீர் மின் நிலையம் அமைக்கும்பணியை மேற்கொண்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ரஞ்சித் சாகரில் இந்த நீர் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த நீர் மின் நிலையத்தில் 150மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட பிரிவு முதலில் அமைக்கப்படுகிறது.
இத் திட்டத்தின் முடிவில் இந்த நீர் மின் நிலையத்தில் மொத்தம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்என்பது குறிப்பிடத்தக்கது.
1970-ம் ஆண்டு முதன் முதலாக நீர் மின் நிலையம் அமைக்கும் பணியைத் தொடங்கிய பெல் நிறுவனம் கடந்த 30ஆண்டுகளில் 300 நீர் மின் நிலையங்களை அமைத்து சாதனை படைத்துள்ளது.
நாடு முழுவதும் பெல் நிறுவனம் அமைத்துள்ள நீர் மின் நிலையங்கள் மூலம் 12 ஆயிரத்து 320 மெகாவாட்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அகில இந்திய அளவில் உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சாரத்தில் 51சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மட்டுமல்ல நியுசிலாந்து, மலேசியா, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளிலும் நீர் மின்நிலையங்களை பெல் நிறுவனம் அமைத்துக் கொடுத்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications