லஞ்சம் பெற சம்மதித்தோம் - தெ.ஆப்பிரிக் கிரிக்கெட் வீரர்கள் ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

ஜொகான்னெஸ்பர்க்:

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் மோசமாக விளையாடலஞ்சம் பெற சம்மதித்தோம் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் கிப்ஸ்,வில்லியம்ஸ் இருவரும் ஒப்புக் கொண்டனர்.

தென் ஆப்பிரிக்க அணி கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது.

அப்போது கிரிக்கெட் சூதாட்டக்காரர்களைத் தொடர்புகொண்டு அவர்களிடம் லஞ்சம்வாங்கியதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குரோனியேமீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நீதிபதி எட்வர்ட் கிங்தலைமையில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக் கமிஷன் பல கிரிக்கெட்வீரர்களிடம் விசாரணை நடத்தியது.

இக் கமிஷன் இடைக்கால அறிக்கை தென் ஆப்பிரிக்க அரசிடம் சமீபத்தில்சமர்ப்பிக்கப்பட்டது.

இந் நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தி ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அக் கூட்டத்தில் கிப்ஸ், வில்லியம்ஸ் இருவரும்வாக்குமூலம் அளித்தனர்.

அப்போது நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மோசமாகவிளையாடினால் இருவருக்கும் தலா 15 ஆயிரம் டாலர் லஞ்சம் தருவதாக குரோனியேகூறினார்.

நாங்களும் மோசமாக விளையாட சம்மதித்தோம். ஆனால், அவ்வாறுநடைபெறவில்லை என்று இருவரும் கூறினர்.

இவர்கள் இருவர் மீதான மேல் நடவடிக்கை பற்றி ஆகஸ்ட் 28-ம் தேதி தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும்.

லஞ்சம் பெற சம்மதித்ததை இருவரும் ஒப்புக் கொண்டதால் இருவருக்கும் கிரிக்கெட்விளையாட ஆயுட்காலத் தடை விதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+