வேளாங்கண்ணி மாதா கோயிலில் 29-ம் தேதி கொடியேற்றம்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்:

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா வரும் 29--ம் தேதி தொடங்குகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இத் திருவிழா செப்டம்பர் 8-ம் தேதிவரை நடைபெறும்.

இந்த 10 நாட்கள் திருவிழாவில் தினமும் சிறப்புப் பிரார்த்தனைகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். .

29-ம் தேதி நடைபெறும் முதல் நாள் நிகழ்ச்சியில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் கொடி ஏற்றி வைக்கிறார். இவ் விழாவில் நாகை மாவட்டகலெக்டர் சிவ்தாஸ் மீனா, நாகை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அபய்குமார் சிங், மாவட்ட வருவாய் அதிகாரி ஹரிஹரன் உள்பட கலந்துகொள்கிறார்கள்.

திருவிழாவையொட்டி வேளாங்கண்ணி நகரில் பக்தர்கள் தங்குவதற்கு கீற்றுக் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி குடிநீர்க் குழாய்கள்,கழிவறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (நாகப்பட்டினம் கிளை) சார்பில் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படஉள்ளன. இது தவிர பழனி, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கல் பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

போலீஸ் கண்காணிப்பாளர் அபய்குமார் சிங் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் வேளாங்கண்ணி முழுவதும் தீவிர பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+