கென்யாவில் சரக்கு ரயில் தீப்பிடித்து வெடித்ததில் 18 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
நைரோபி:
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தில் 18 பேர்இறந்தனர். 40 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
தலைநகர் நைரோபிக்கு அருகில் உள்ள அதி ரிவர் ரயில் நிலையத்தில் எரிபொருள்நிரப்பப்பட்ட சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது.
திடீரென்று ஏற்பட்ட இன்ஜின் கோளாறால் ரயிலில் நிரப்பப்பட்டிருந்த எரிபொருள்தீப்பிடித்து வெடித்தன. இதனால், ரயில் முழுவதும் சேதமடைந்தது.
அது மட்டுமல்லாமல் ரயில் நிலையக் கட்டடமும், ரயில் நிலையத்துக்கு அருகில்இருந்த வீடுகளும் கடுமையாகச் சேதமடைந்தன.
இவ் விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 18 பேர் இறந்தனர். 40 பேருக்கு மேல்காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications