கூட்டுறவு பெட்ரோல் பங்க்கில் 13 லட்ச ரூபாய் கையாடல்
வேலூர்:
வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடி மூலம் செயல்படும் பெட்ரோல் நிலையத்தில் 13லட்ச ரூபாய் கையாடல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூட்டுறவு சங்கங்ளுக்கான இணைச் செயலாளர் வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
வேலூர், ஆபீசர் லைன் சாலையில் இயங்கிவரும் இந்த பெட்ரோல் பங்க்கில், கடந்தசில மாதங்களாக பெட்ரோல் விற்கப்பட்ட பணம் வங்கியில் கட்டப்படாமல் இருந்தது.
கற்பகம் கூட்டுறவு அங்காடியின் வங்கிக் கணக்கைப் பார்த்தபோது இம் மோசடிகண்டுபிடிக்கப்பட்டது. வங்கி அதிகாரிகளும், கற்பகம் கூட்டுறவு அங்காடி கணக்கில்பணம் செலுத்தப்படாததை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த கையாடல் சம்பவத்தையடுத்து பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த அனைவரும்மாற்றப்பட்டுள்ளனர்.
பணத்தை திரும்பக் கட்டாமலிருந்தால் போலீஸ் மூலம் நடவடிக்கை என கடும்எச்சரிக்கை விடுத்த பின் இதுவரை 9 லட்ச ரூபாய் கட்டப்பட்டுள்ளது. இன்னும் 3 லட்சரூபாய் கட்டப்பட வேண்டியுள்ளது என்றார் வெள்ளைச்சாமி.












Click it and Unblock the Notifications