வீரப்பனைச் சந்தித்தார் நக்கீரன் கோபால்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனை நக்கீரன் கோபால் சந்தித்துவிட்டதாக கர்நாடக முதல்வர்எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
பெங்களூரில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரைக் கடத்திச் சென்றுள்ள சந்தனக் கடத்தல்வீரப்பனைச் சந்திப்பதற்காக அரசுத் தூதராக காட்டுக்குள் சென்ற நக்கீரன் கோபால்கடுமையான மழை, வீரப்பனிடமிருந்து தகவல் கிடைக்க தாமதம் போன்றபிரச்சினைக்குப் பிறகு கடைசியாக வீரப்பனைச் சந்தித்துவிட்டார்.
வீரப்பனை கோபால் சந்தித்துவிட்டதாக மட்டும் தகவல் வந்துள்ளது மேற்கொண்டுதகவல் ஏதும் வரவில்லை. ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தில் திட்டமிட்டபடி எல்லாம்நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
கடத்தப்பட்டுள்ள ராஜ்குமாரையும் மற்றவர்களையும் மீட்க வேண்டும் என்ற ஒரேநோக்கில்தான் வீரப்பன் கோரிக்கையை ஏற்று தடா கைதிகள் 51 பேரையும் விடுவிக்கஅரசு முடிவு செய்தது. வேறு எந்த காரணமும் இல்லை என்றார் கிருஷ்ணா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications