புலிகளுடன் துப்பாக்கிச் சண்டை - 3 போலீஸார் சாவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் கிழக்கு அம்பாரை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று போலீஸார் இறந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர்.
பாக்கல் கிராமத்தில் விவசாயிகள் வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாகபோலீஸார் சிலர் அனுப்பப்பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த புலிகளுக்கும், போலீஸாருக்கும் சண்டைமூண்டது.
இந்தச் சண்டையில் 3 போலீஸார் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் புலிகள் சிலரும் இறந்திருக்கலாம் என்றுகூறப்படுகிறது. உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications