ராஜ்குமார் விடுதையானதாக வதந்... தீ
சென்னை:
ராஜ்குமார் என்று வருவார் என்று ஒரு புறம், காவல்துறை அதிகாரிகளும், கர்நாடக, தமிழக அரசுகளும் கவலையோடு காத்திருக்க... ராஜ்குமார்காட்டிலிருந்து வந்துவிட்டார் என்று வதந்தி கிளம்பிக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் பல இடங்களிலும் இந்த வதந்தீ, தீயாகப் பரவிக்கொண்டிருக்கிறது.
இது பற்றி தமிழக காவல்துறையிடம் விசாரித்தபோது, நம்மைப்போலலே வினாயகர் சதுர்த்தியை முக்கியமான விழாவாக கர்நாடக மக்களும்நினைக்கிறார்கள். இந்த விழாவின்போது ராஜ்குமார் நம்முடன் இருக்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
அதே மாதிரி அவர் வந்துவிட்டால் எங்களுக்கும் சந்தோஷம் தான். ராஜ்குமார் காட்டிற்குள் சென்று ஒரு மாதம் ஆகிறது என்பதை நினைக்கஎங்களுக்கும் வருத்தமாகவே இருக்கிறது. வினாயகர் அருளில் அவர் வந்துவிட்டால் அதை விட பெரிய விஷயம் தமிழக, கர்நாடக மக்களுக்கு வேறு ஏதும்இருக்க முடியாது என்கிறார்கள் தமிழக அதிகாரிகள்.
குறிப்பாக, பெங்களூரில் உள்ள பத்திரிக்கை நிருபர்கள், மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் வினாயகர் சதுர்த்திக்கு அதாவது கணேஷ் பெஸ்டிவெல்லுக்குராஜ்குமார் வந்துவிடுவாரா என்று மிக ஆர்வமாக , தமிழக அதிகாரிகளிடம், நக்கீரன் பத்திரிக்கை அலுவலகத்திலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இவர்களுடைய ஆர்வத்தை பயன்படுத்தி யாராவது வதந்தியை கிளப்பிவிட்டிருக்கலாம். ராஜ்குமார் இன்னும் காட்டில் தான் இருக்கிறார்.
வியாழக்கிழமை பிற்பகலில் நக்கீரன் ஆசிரியர் கோபால் காட்டிற்குள் சென்றுவிட்டார். வீரப்பனை சந்தித்து அவருடன் பேசிக்ககொண்டிருக்கிறார்என்கிறார்கள் தமிழக அதிகாரிகள். வீரப்பன் கேட்ட ஐந்து தமிழ்த் தீவிரவாதிகளை விடுதலை செய்ய அரசு கடும் முயற்சிகள் செய்து வருகிறது.
ஐந்து தீவிரவாதிகள், கர்நாடகாவில் உள்ள 121 தடா கைதிகள் விஷயத்தில் வீரப்பன் மிகவும் உறுதியாகவே இருக்கிறான். இந்த விஷயங்கள் எல்லாம்நீதிமன்றம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் விடுதலை தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்று கவலையோடு பேசுகிறார்கள் தமிழக அதிகாரிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications