காங்கிரசுடன் இணைந்தால் மூப்பனார் கேட்கும் பதவிகள் கிடைக்கும்: குமரியார்
சென்னை:
காங்கிரசுடன் தமிழ் மாநில காங்கிரசை இணைப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாக கோவையில் குமரி அனந்தன் தெரிவித்தார்.
கோவை, பன்னிமடை என்ற இடத்தில் நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவையின் தலைவருமான குமரி அனந்தன், நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சித் தலைமை, தமிழ் மாநில காங்கிரசின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுமாஎன்பது குறித்து மூப்பனார் சந்தேகத்தில் உள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மூப்பனார் கேட்கும் பதவிகளைப்பெற்றுத் தர முயல்வேன். காங்கிரசுடன் தமிழ் மாநில காங்கிரசை இணைப்பதற்குத் தேவையான அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ளப்படும்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை மனிதாபிமான அடிப்படையில் வீரப்பன் விடுவிக்க வேண்டும். ராஜ்குமாரைக் கடத்திச்சென்று காவிரி நீர் பெற்றுத் தருவதாக வீரப்பன் கூறியுள்ளார். ஆனால், தற்போதைய கடத்தலால் கர்நாடகத்தில்உள்ள தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் வீரப்பன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை விடுவிப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போன்று தான்வீரப்பனைப் போலீசார் பிடிப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பூலான் தேவி கூட 11 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகே பொது வாழ்விற்கு வந்துள்ளார். பல கொலைகளைச்செய்துள்ள வீரப்பனை, ஜனாதிபதியே கூட மன்னிக்க முடியாது.
நக்கீரன் கோபால் செல்லும் இடத்திற்கு உளப்பிரிவு செல்ல இயலவில்லையென்றால், அது உளவுத் துறை அல்ல,உதவாத் துறை தான். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் பலருக்கு ஆறுதலாக இருக்காது என குமரி அனந்தன்தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications