10 நாளில் வாதத்தை முடிக்க கர்நாடகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி:
51 தடா கைதிகளை விடுவிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு மீதான வாதத்தை10 நாட்களுக்குள்முடிக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றுள்ளான். அவர்களை விடுவிக்க 14 கோரிக்கைகளை வீரப்பன்கூறியுள்ளான்.
கர்நாடகச் சிறைகளில் உள்ள 51 தடா கைதிகள் உள்பட 121 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பது வீரப்பனின் கோரிக்கைகளில் ஒன்று.
வீரப்பனின் கோரிக்கையைப் பரிசீலித்த கர்நாடக அரசு, வீரப்பனின் கோரிக்கைப்படி 51 பேர் மீதான தடா வழக்கு உள்பட 121 பேர் மீதான அனைத்துவழக்குகளையும் வாபஸ் பெற முடிவு செய்து அதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.
ஆனால், 51 தடா கைதிகளையும் விடுதலை செய்ய தடை விதிக்கவேண்டும் என்றும் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் ஷகீல்அகமதின் தந்தை அப்துல் கரீம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இம் மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தது. வீரப்பனைப் பிடிக்க முடியாத கர்நாடக அரசுராஜிநாமா செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இந் நிலையில், அப்துல் கரீம் தாக்கல் செய்த மனுவுக்கு கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன் இம் மனு மீதான விசாரணையைத் துரிதப்படுத்தவேண்டும் என்று கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இம் மனுக்களை தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
விசாரணையைத் துரிதப்படுத்தக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், மற்றொரு மனு மீதான வாதத்தை 10 நாட்களுக்கு முடிக்கும்படி கர்நாடகஅரசு சார்பில் ஆஜரான அம் மாநில சொலிசிடர் ஜெனரல் ஹரிஷ் கரேயைக் கேட்டுக் கொண்டனர்.
அப்துல் கரீமின் மனு மற்றும் கர்நாடக அரசின் பதில் மனு ஆகியவற்றின் மீதான விவாதங்கள் முடிந்தபிறகு எவ்வளவு விரைவாக இவ் வழக்கைவிசாரித்து தீர்ப்பு கூறமுடியும் என்பதை நிர்ணயிக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications