ராஜ்குமார் கடத்தலால் அரசு விழாக்கள் ரத்து
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் கடத்தல் காரணமாக கர்நாடக அரசு கடந்த ஐந்து வாரங்களாக பல அரசு விழாக்களை ரத்து செய்துள்ளது. கோடிக்கணக்கில் நஷ்டம்ஏற்பட்டுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
முதல்வர் கிருஷ்ணா உள்பட அரசு அதிகாரிகள் பெரும்பாலோர், ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக பிசியாக இருப்பதால் அரசு விழாக்களைநடத்த முடியவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
ரத்தான விழாக்களில் குறிப்பிடத்தக்கது, லால்பாக் தோட்டக்கலை பூக்கள் கண்காட்சி. சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் லால்பாக் கண்ணாடிமாளிகையில் வருடந்தோறும் இந்த மலர் கண்காட்சி தவறாமல் நடப்பது வழக்கம்.
ஒரு வாரம் நடக்கம் இந்தக் கண்காட்சி வழக்கமாக ஆகஸ்ட் 9-ம் தேதி துவங்கும். சுதந்திர தினத்தன்று முடிவடையும். இம்முறை அது நடக்கவில்லை.
இதேபோல, ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை, சர்வதேச மலர்க் கண்காட்சியை நடத்த மாநில அரசு திட்டமிட்டிருந்தது. அதுவும் ரத்துசெய்யப்பட்டு விட்டது.
சுதந்திர தினத்துக்கு முன்பு சுதந்திரப் போராட்ட வீரர்கள், சட்ட வல்லுனர்கள், முன்னாள் படை வீரர்கள் ஆகியோரைக் கெளவரப்படுத்தும் வகையில்,ஆளுநர் மாளிகையில், டீ பார்ட்டி நடைபெறும். அதுவும் இம்முறை நடக்கவில்லை.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல, நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் மூன்று நாள் கர்நாடக பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்தியசாப்ட்வேர் தொழிலதிபர்களுடன் பேச அவர் திட்டமிட்டிருந்தார். அது எதுவும் நடக்கவில்லை.
ராஜ்குமார் கடத்தல் காரணமாக கர்நாடக பொருளாதாரத்திற்கு ஆதாரமாக திகழும் இரண்டு துறைகளான திரைப்படத் துறை மற்றும் மதுபானத்துறை பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததாலும், திரையுலகம் தொடர்பான பணிகள் முடங்கி விட்டதாலும் தினசரி ரூ. 300மில்லியன் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பப்களுக்குப் பெயர் போன பெங்களூரில் 15 நாட்கள் பப்கள் மூடப்பட்டிருந்ததால், ரூ. 12.3 பில்லியன் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
ராஜ்குமார் வந்தால்தான், பெங்களூரும், கர்நாடகமும் சகஜ நிலைக்குத் திரும்பும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications