எச்.பி.எப் தொழிற்சாலையை சீரமைக்க இறுதி வாய்ப்பு
ஊட்டி:
ஊட்டி, எச்.பி.எப். தொழிற்சாலையை மறு சீரமைப்பு செய்ய அரசுக்கு இறுதி வாய்ப்பு அளிக்க இந்திய தொழிற்சாலைகளின் மறு சீரமைப்பு மற்றும் நிதிக்கமிட்டி முடிவு செய்துள்ளது.
ஊட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை ஆசியாவிலேயே போட்டோ பிலிம்களை உற்பத்தி செய்யும் ஒரே தொழிற்சாலையாகஉள்ளது.
இந்தத் தொழிற்சாலை கடந்த பல ஆண்டுகளாக நலிவடைந்த நிலையில் செயல்பட்டு வருகிறது. அரசு நிறுவனமான இந்தத் தொழிற்சாலையால் அரசுக்குபல கோடி ரூபாய் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை ரூ. 1500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடனாக மட்டும் இத் தொழிற்சாலை549 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
இந்தத் தொழிற்சாலையை மறு சீரமைப்பு செய்ய இந்திய தொழிற்சாலைகளின் நிதி மற்றும் மறு சீரமைப்புக் கழகம் (பி.ஐ.எப்.ஆர்) ஆய்வு செய்தது. கடந்த5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆய்வில், இத் தொழிற்சாலையை சீரமைக்க இயலாது, மூடி விடலாம் என முடிவு செய்து அரசுக்கு சிபாரிசு செய்தது.
அப்போதைய அரசு விடாமல் தொடர்ந்து நடத்தியது. தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேறு வழியே இல்லை, மூடித்தான் ஆக வேண்டும் எனஇந்நிறுவனம் முடிவு செய்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இத் தொழிற்சாலையை மூட அனுமதி கோரி பத்திரிகை ஒன்றில் விளம்பரம் வெளியிட்டது.
தற்போது, தொழிற்சாலையை மறு சீரமைப்புச் செய்து கொள்ள அரசுக்கு இறுதி வாய்ப்பு அளிப்பதாக சீரமைப்புக் கழகம் அறிவித்துள்ளது. இந்த முடிவைஅனைத்து தொழிற்சங்கங்களும் வரவேற்றுள்ளன. ஆனால், அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு, தொழிற்சாலையை மூடுவதைதற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications