விவசாயியின் வறுமை எப்போதும் மாறாது .. ராமதாஸ்
ஈரோடு:
பசுமைப் புரட்சி ஏற்பட்டாலும், வெண்மைப் புரட்சி ஏற்பட்டாலும் விவசாயிகளுக்குவறுமையே மிஞ்சுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்குபல்வேறு நலத் திட்டங்களை அளிக்கும் என ராமதாஸ் பேசினார்.
ஈரோடு மாவட்டம், பவானியில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி மாநாட்டில் பாட்டாளிமக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் பேசியதாவது:
பசுமைப் புரட்சியாலும், வெண்மைப் புரட்சியாலும் விவசாயிக்கு எந்த நன்மையும்இல்லை. இதனால் பயனடையப் போவது நாடு மட்டுமே. விவசாயியின் வறுமைஎப்போதும் மாறாது.
கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலையே இல்லை.கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயி, அதன் கொள்முதல் விலையை நிர்ணயிக்கமுடியவில்லை.
டன் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பல காலமாகவிவசாயிகள் போராட்டம் நடத்தினாலும், இதில் முழுமையாக வெற்றி பெறமுடியவில்லை.
இதே போன்ற சூழ்நிலைதான் மற்ற விலை பொருட்களுக்கும் நிலவி வருகிறது. இதுநீடித்தால், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர முடியும்?.
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அளிக்கும்.
நெல்லுக்கு நல்ல விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், இலவச மின்சாரம் வழங்கவேண்டும் என முதன் முதலில் கோரிக்கை வைத்தது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே.திருவாண்ணாமலையில் செப்டம்பர் 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் விவசாயிகளின்பிரச்னைகள் விரிவாக விவாதிக்கப்படும்.
இக் கூட்டத்திற்கு மத்திய விவசாய அமைச்சர் நிதிஷ்குமார், மாநில வேளாண்மைதுறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்ஆகியோரை அழைத்துள்ளோம். இங்குவிவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்துவோம்.
நெசவுத் தொழிலைப் பொறுத்தவரை நெசவாளிகளுக்கு வாரத்திற்கு மூன்று நாாட்கள்வேலை இருப்பதே கடினமான காரியமாக உள்ளது. இவர்கள் உற்பத்தி செய்யும்துணிகளை விற்க முடிவதில்லை.
வெளிநாட்டிலிருந்து பருத்தி, நூல் உட்பட பொருட்களை இறக்குமதி செய்வதையும்,இங்கிருந்து வெளிநாடுகளுக்கு இவைகளை ஏற்றுமதி செய்வதையும் அரசு தடைசெய்ய வேண்டும். அப்போது தான் நெசவாளர்களின் நலன் காக்கப்படும்.
ராஜிவ் காந்தி இறந்த பிறகு, இலங்கைப் பிரச்னை குறித்து எந்தக் கட்சியுமேவாய்திறக்கவில்லை. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்று மட்டுமே சென்னையில்மாநாடு நடத்தி, தமிழர்களின் நலனுக்கு குரல் கொடுத்தது.
பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களைக் காக்கபாடுபட்டு வருகிறது. எனவே, பொதுமக்களிடையே பாட்டாளி மக்கள் கட்சிஆதரவைப் பெற்று வருகிறது என ராமதாஸ் பேசினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications